SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு தாமதமாக விழித்து கொண்டதன் விளைவு: செல்வி, தனியார் கல்லூரி விரிவுரையாளர்

2019-06-17@ 00:36:34

சென்னையில் கடந்த 3 மாதங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கடந்த 2 மாதங்களாக குழாயில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. அதுவும் அரை மணி நேரம் மட்டுமே காலையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 3  முதல் 6 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் தரப்படுகிறது. வேலையை பார்த்தால் தண்ணீர் கிடைக்காது. இப்போதைய சூழ்நிலையில் தண்ணீர் தான் முக்கியம் என்பதால் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து தண்ணீர் பிடித்து விட்டு  தான் வேலைக்கு செல்கிறேன். இந்த தண்ணீர் குடிக்க மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற பயன்பாட்டிற்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தற்போது வாளியில் தண்ணீர் பிடித்து பயன்படுத்துமாறு  தமிழக அறிவுரை வழங்கியுள்ளது. இதை அவர்கள் ஆரம்பத்தில் செய்திருந்தால் தற்போது தண்ணீர் பிரச்சனையை ஒரளவுக்கு தவிர்த்து இருக்கலாம். அதே நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது என்று முன்கூட்டியே தமிழக அரசுக்கு  ெதரிந்தும் தாமதமாக நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக சென்னை மாநகரில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது.

இப்போது நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் போர்வெல் மூலம் தண்ணீர் பெற முடியவில்லை. எங்களது பகுதிகளில் உள்ள அனைத்து  வீடுகளிலும் போர்வெல் மூலம் தண்ணீர் கிடைக்காத நிலையில், அனைவரும் சென்னை  குடிநீர்வாரியம் தரும் தண்ணீரை நம்பித்தான் இருக்கிறோம். அந்த தண்ணீரும் சரியாக கிடைக்காததால் பல வீடுகளில் லாரி தண்ணீரை புக்கிங் செய்து காத்திருக்கின்றனர். சிலர் தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் பெற எவ்வளவு பணம் கொடுக்கத் தயாராக இருந்தும், அந்த தண்ணீரும் கிடைப்பதில்லை. இதனால், வேறுவழியின்றி குடிநீர் வாரியம் தரும் நீரை வைத்து சமாளிக்கிறோம். சில நேரங்களில் குளிக்க கூட  தண்ணீர் இல்லாமல் அலுவலகத்திற்கு செல்லும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் இது போன்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. பருவமழை இல்லாதது ஒரு காரணம் என்று கூறினாலும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. மிகவும் தாமதமாக இப்போது விழித்து ெகாண்டு எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கும் என்று  தேடிக்கொண்டிருக்கின்றது. தமிழக அரசு இப்போது என்ன திட்டம் வகுத்தாலும் அதற்கு உடனடியாக தீர்வு காண முடியாது. எனவே, இனி வருங்காலங்களிலாவது இது போன்ற பிரச்சனை ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அதே போன்று, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை அரசு தீவிரப்படுத்த வேண்டும். மழை நீர் கட்டமைப்பு இல்லாதவர்களின் வீடுகளை  கண்டறிந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். அப்படி தீவிரப்படுத்தினால் மட்டுமே வரும்காலங்களில் நிலத்தடி நீர் மூலமாவது தண்ணீர் பிரச்சனையை ஒரளவு சமாளிக்க முடியும். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. மிகவும் தாமதமாக இப்போது விழித்து ெகாண்டு எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கும் என்று தேடிக்கொண்டிருக்கின்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai20

  சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

 • modi20

  வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

 • hospital20

  ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

 • kaasi sivan20

  காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

 • 17-02-2020

  17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்