SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாம்பழத்துக்கு ராஜ்யசபா சீட்டு தரக்கூடாது என்று டெல்லி கூறிய அறிவுரையை சொல்கிறார்: wiki யானந்தா

2019-06-17@ 00:09:48

‘‘என்ன விக்கி சேலம்காரர் டெல்லிக்கு போய் என்ன சாதிச்சார்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தன் பர்சனல் மேட்டர்களை சாதித்துக் கொண்டார். நாற்காலியில் ‘கம்’ போட்டு உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை என்ற ‘கம்’மை வாங்கி வந்துள்ளார். மேலும் சட்டசபை கூட்டத் தொடரில் பிரச்னை வந்தால் கிண்டிக்காரர் மூலம் தன் அரசை பாதுகாப்பது பற்றி பேசி இருக்கிறார். சென்னை வந்தவரை ேதனிக்காரர் நேரில் போய் பார்க்கவில்லையாம். மைக்கை அழைத்து செல்ல தெரிகிறது. நிதி ஆயோக் என்றால் அந்த நிதியின் அமைச்சரே தேனிகாரர்தானே அவரை ஏன் அழைத்து செல்லவில்லை என்ற கேள்வியை அவரது ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். ஆனால் தேனிக்காரர் டெல்லி தாமரை விவிஐபியை தனியாக சந்திக்கவே விரும்புகிறாராம். அதனால அடுத்த சில வாரங்களில் அவர் டெல்லிக்கு போனாலும் போவார்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘தண்ணீர் பிரச்னையை கொஞ்சம்கூட அரசு கண்டு ெகாண்டதுபோல தெரியவில்லையே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தண்ணீர் பிரச்னையை கண்டுகொள்ள தயாரில்லை. ஆனா, தண்ணீர் பிரச்னையை யார் தூண்டினாலும் அவர்களின் பெயர் முகவரி போன்றவற்றை வாங்கி அவர்களை உள்ளே தள்ள அரசு தயாராகி வருகிறதாம். ஆனால் அப்படி ெசய்தால் உள்ளாட்சி தேர்தலில் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று காக்கி தரப்பில் சொல்லப்பட்டது. எனினும் இந்த போராட்டங்களின் பின்னணியில் எதிர்கட்சிகள் இருப்பதாக சேலம்காரர் நினைக்கிறார். ஆனால் காக்கிகளோ, உண்மையில் தண்ணீர் பிரச்னை இருக்கிறது. அது இயற்கையாக எழுந்தது. இதில் எந்த கட்சியையும் குறை சொல்ல முடியாது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதுதான் இப்போதைக்கு முக்கிய பணி. அதை முதலில் செய்யுங்கள். கைது நடவடிக்கையை கைவிடுங்கள் என்று சொன்னார்களாம்... அவரும் சரி என்று தலையாட்டினாராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘பிஇ கவுன்சலிங் தள்ளிப்போகுதே ஏன்..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இரண்டு காரணங்களை சொல்கிறார்கள். ஒன்று அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விண்ணப்பித்தவர்கள், சான்று சரிபார்த்தவர்களின் லிஸ்ட் அப்டேட் ஆவதில் தாமதம். தரவரிசை பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் நீடிக்கிறதாம். இன்னொன்று தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சீட் நிரம்பவில்லை. பிஇ தாமதமானால் மாணவர்கள் தானாக கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள். இதன் மூலம் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் பயன்பெறும். அதனால் நாமும் பயன்பெறலாம் என்று நினைக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிப்ட் தரப்பு கட்சியை கலைக்கப்போவதாக ஒரு புரளி ஓடியதே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இப்போதைக்கு கட்சியை அறிக்கை, டிவிட்டர் மூலம் நடத்த கிப்ட் தரப்பு முடிவு செய்து இருக்கிறதாம். அந்த அளவுக்கு பைனான்ஸ் நெருக்கடியாம். இனிமேலும் பணம் கொடுத்து இலை தரப்பை இழுக்க முடியாது என்று கைவிரித்துவிட்டாராம். அப்புறம் தன்னை நம்பி வந்த தகுதி இழந்தவர்களையும் கழட்டிவிட்டுட்டாராம். அதில் வசதி படைத்தவர்கள் மட்டும் கிப்ட் தரப்பில் பணம் கேட்பதில்லையாம். மற்றவர்கள் அதை எதிர்பார்த்து வந்ததால் பணம் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கிறார்களாம். சிறை பறவை சிறையில் இருந்து வந்தால்தான் கட்சி இருக்குமா இல்லை... கலையுமா என்பது தெரியவரும். காரணம், அவர் தொடர்ந்துள்ள மூல வழக்கு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதாம்... அதனால அவர் வரும் வரை நிர்வாகிகளை ஒன்றிணைக்க கட்சியை பயன்படுத்துவார். அப்புறம் நிலைமை மாறும்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ராஜ்ய சபா சீட் என்ன ஆச்சு...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘டெல்லி விஷயத்தை சொல்கிறேன் கேளு... மாம்பழம் எப்போதும் நம்மை எதிர்த்து அரசியல் செய்துட்டு வர்றாங்க... தேர்தல் ஒப்பந்தம் தேர்தலோடு முடிந்துவிட்டது. இப்போது தேர்தல் இல்லை. எனவே, ராஜ்யசபா சீட் தர முடியாது என்று கூறிவிடுங்கள். அவர்கள் ராஜ்யசபாவிற்கு வந்தாலும் நமக்கு எதிராகதான் பேசுவார்கள். ஏற்கனவே ராஜ்யசபாவில் தாமரைக்கு பலம் குறைவாக இருக்கிறது. இந்த தருணத்தில் அவர்களுக்கு சீட் கொடுத்தால் அவர்கள் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து சேலம் எட்டுவழி சாலை திட்டம், நீட் போன்றவற்றை எதிர்த்து பேசுவார்கள். அதன் மூலம் தேவையில்லாத பிரச்னை வரும். உங்கள் தலைவி பாணியில் சீட் இல்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளுங்கள். அல்லது நேரில், போனில் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். அந்த சீட்டை உங்கள் கட்சியின் சீனியர்களுக்கு கொடுங்கள். நாங்களும் உங்களுக்கு அமைச்சர் பதவி விரிவாக்கத்தின்போது கவனிக்கிறோம்...’’என்று பேசிக் கொண்டதாக டெல்லியில் இருந்து தகவல்கள் வருகிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உயர்கல்வித்துறையில் என்ன பிரச்னை...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சர்ச்சைக்கு பஞ்சமில்லா துறைனு சொன்னா அது உயர்கல்வித்துறை தான். வேற யாருக்கும் இல்லாதபடி, இந்த துறை மினிஸ்டருக்குத்தான் தொகுதி, நிர்வாகம், பல்கலைக்கழகம், உதவிபெறும் கல்லூரிகள், அரசியலுக்கு, அரசுக்குனு 7 பிஏ இருக்காங்களாம். இவங்க பண்ற அலப்பறையை அந்த துறை அதிகாரிகளால பொறுத்துக்க முடியலயாம். இது ஒருபக்கம் இருந்தாலும், உயர்கல்வித்துறையில மினிஸ்டருக்கும், செயலருக்கும் ஏழாம் பொருத்தமாகவே போயிட்டு இருக்காம். மாநிலம் முழுசும் 2,500 உதவி பேராசிரியர் பணியிடம் காலியா இருக்கு. இந்த காலியிடத்துக்கு, தற்போது அரசு கல்லூரியில கவுரவ விரிவுரையாளராக இருக்கறவங்கள நேரடியா போடணும்னு மினிஸ்டருக்கு ஆசையாம். ஆனால், முறைப்படி எக்ஸாம் வச்சு தான் போஸ்டிங்க போடணும்னு செயலாளர் ஸ்டிரிக்ட்டா சொல்றாராம். இதுதான் லேட்டஸ்ட் பனிப்போருக்கு காரணமாம். இவங்களோட பிரச்னையில டெய்லி ஒரு உத்தரவ போட்டு, நம்மள தவிக்க விடுறாங்கனு டைரக்டர் ஆபிசுல இருந்து புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்