SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகையாக மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு

2019-06-16@ 18:11:15

சென்னை: மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகையாக மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு  தெரிவித்துள்ளது. தமிழக கடலில் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதனால் மன்னார்  வளைகுடா, பாக்ஜலசந்தி, வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் 10 ஆயிரம் விசைப்படகுகள் பாதுகாப்பாக கரை நிறுத்தப்பட்டன. மேலும், 2 லட்சம்  மீனவர்கள் வேலை இழந்து மாற்றுத்தொழில் ஈடுபட்டனர். ஜூன் 14ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் மீன்பிடி தடை விலகியதால், மீனவர்கள்  வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1500க்கும் அதிகமாக விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் நேற்று முன்தினம்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பாக்ஜலசந்தி கடலில் நேற்று முழுவதும் மீன்பிடித்து விட்டு இன்று காலை படகுகள் கரை திரும்பின. படகுகளில்  தலா 300 கிலோ முதல் 800 கிலோ வரை இறால் மீன்பாடு இருந்தது. மேலும் கடல்நண்டு, கனவாய் உள்பட பல வகையான மீன்கள் கிடைத்தன.  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மீன் வியாபாரிகள் மீன்களை போட்டிபோட்டுக் கொண்டு அள்ளி சென்றனர்.

இதனால் கரை திரும்பிய மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார், கடந்த காலத்தை போன்று இந்த ஆண்டும் 1.67 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும் என்றும் நிவாரணத்தொகையாக  ரூ.83.50 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongprotest247

    ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மற்றும் மர்ம கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

  • governorresignus

    பெண்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கிய பியூர்டோ ரிக்கோ தீவின் ஆளுநர்: உடனே பதவி விலகக்கோரி மக்கள் பிரம்மாண்ட பேரணி

  • britainthunder

    பிரிட்டன் நாடுகளில் வெயில் வாட்டியெடுத்த நிலை மாறி நேற்று அதிபயங்கர இடி மின்னலுடன் மழை

  • imrankhantrumphmeet

    முதன் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: புகைப்படங்கள்

  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்