SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு: இன்று காலை முதல் அமல்..!

2019-06-16@ 15:04:59

புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 28 வகையான பொருட்களுக்கு, இந்தியாவில் சுங்க வரி உயர்த்தப்பட்டது. இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு அமெரிக்க 25 விழுக்காடு வரையில் வரிகளை உயர்த்தியது. இதற்கு பதிலடியாக, இந்தியாவும், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தி கடந்தாண்டு அறிவித்தது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையால், அதனை நடைமுறைப்படுத்துவது  ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் இந்தியா, வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு உயர்த்தப்பட்ட வரிவிதிப்பு, இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது.

முதலில் 29 பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டது. அர்த்தீமியா என்ற இறால் வகை மட்டும் அதிலிருந்து நீக்கப்பட்டது. கூடுதல் வரி மூலம் 217 மில்லியன் டாலர் கூடுதல் வருமானம் இந்தியாவுக்கு கிடைக்கும். இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், தங்கள் பொருட்களுக்கு கூடுதல் வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், ஆப்பிள், பாதம் பருப்பு, அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட 200 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களின், சுங்கவரி உயர்த்தப்பட்டிருப்பதால், இந்திய சந்தையில், அவற்றின் விலை உயர்ந்து, விற்பனையாகும் சூழல் ஏற்படக்கூடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்