SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

2019-06-16@ 00:56:02

சென்னை: மாதவரம் அருகே மஞ்சம்பாக்கம் சாலையில் நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.  மாதவரம், மாதவரம் பால் பண்ணை, மாத்தூர், மஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள மாந்தோப்புகளில் தனியார் சிலர் ஆழ்துளை கிணறுகள் அமைத்து ராட்சத மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை எடுக்கின்றனர். பின்னர்  லாரிகளில் நிரப்பி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் இப்படி நிலத்தடி நீரை ஆழ்துளை கிணறுகள் அமைத்து திருடுவதால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், இது சம்பந்தமாக கலெக்டர், தாசில்தார், காவல்துறை, குடிநீர் வழங்கல் வாரியம் ஆகியோருக்கு பல பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நிலத்தடி நீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு மாதவரம் அருகே உள்ள மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு முன்பு ஒன்று கூடினர்.  பின்னர் திடீரென்று மஞ்சம்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் பழனி மற்றும் பல்வேறு பொதுநல சங்கங்களும் பங்கேற்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ‘தகவல் அறிந்த மாதவரம் பால்பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்