SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உளவுத்துறை பகீர் எச்சரிக்கை அயோத்தியில் தாக்குதல் நடக்கலாம்

2019-06-16@ 00:46:37

லக்னோ: அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளனர் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்ைக விடுத்துள்ளது.பாஜ இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அயோத்தியில் ராமர்கோயில் உடனடியாக கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா எழுப்ப ஆரம்பித்துள்ளது. இதற்காக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, நாளை 18 எம்.பி.க்களுடன் அயோத்திக்கு செல்ல உள்ளார். இதேபோல  உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா நேற்று அங்கு வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில், அயோத்தியில் தற்போது மக்கள் அதிகம் கூடி வருவதால், அங்கு பஸ், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதேபோல் வேறு சில தீவிரவாத அமைப்புகளும் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongprotest247

    ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மற்றும் மர்ம கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

  • governorresignus

    பெண்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கிய பியூர்டோ ரிக்கோ தீவின் ஆளுநர்: உடனே பதவி விலகக்கோரி மக்கள் பிரம்மாண்ட பேரணி

  • britainthunder

    பிரிட்டன் நாடுகளில் வெயில் வாட்டியெடுத்த நிலை மாறி நேற்று அதிபயங்கர இடி மின்னலுடன் மழை

  • imrankhantrumphmeet

    முதன் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: புகைப்படங்கள்

  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்