SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து நிதி ஆயோக்கில் எடப்பாடி வலியுறுத்தல்: கோரிக்கை மனு அளித்தார்

2019-06-16@ 00:30:52

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து வலியுறுத்தி பேசினார். பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நேற்று நிதி ஆயோக் கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான முதல்வர்கள் பங்கேற்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருடன், அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  தம்பிதுரை மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளும் டெல்லி வந்திருந்தனர்.       பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கிய நிதி ஆயோக் கூட்டம் 2 கட்டங்களாக மாலை 8 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. இதில், “ஒவ்வொரு மாநிலத்தின் நிதி நிலவரம், மாநில வளர்ச்சியை எப்படி கையாள்வது, மாநில நிதிகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அதனை மத்திய அரசு தரப்பில் இருந்து எப்போது தரப்படும், தொழில்துறை, கல்வி, மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்திற்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் விரிவாக பேசினார். பின்னர் கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து பிரதமர் மோடியிடம் அளித்தார். அந்த மனுவில், தமிழக வளர்ச்சிக்கு தேவையான நிலுவை நிதி உட்பட அனைத்தையும் விரைவில் வழங்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.

மோடியுடன் தனி சந்திப்பு
நேற்று காலை சுமார் 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் தனியாக சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது தமிழகம் தொடர்பான அனைத்து விவரங்கள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், உட்கட்சி விவகாரங்கள், மற்றும் 7பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.  இதையடுத்து பிற்பகல் 12 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை நார்த் பிளாக்கில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது தமிழக நிதி நிலவரங்கள், கஜா மற்றும் ஓகி புயல் பாதிப்பின்போது மத்திய அரசிடம் கேட்ட நிதியை தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து பிற்பகல் 1.10 மணிக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் அதுகுறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள தற்போதைய உத்தரவு ஆகிய விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதுசார்ந்த மனுவையும் கொடுத்துள்ளார்.இறுதியாக நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது, தமிழக சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள், இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக பயங்கரவாதிகள் தமிழகத்தின் கோயம்புத்தூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்