SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 1 வாரத்திற்கு வெப்பம் அதிகரிக்கும்...சென்னையில் 30 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: வானிலை மையம் தகவல்

2019-06-15@ 14:05:28

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பநிலை 106 டிகிரி வரை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், மற்றும் பெரம்பலூரில் அனல் காற்று வீசும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே போன்று திருச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, நீலகிரி உட்பட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 30 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை மழை ஒருமுறை கூட பெய்யாமல் இருந்ததாக வரலாறு இல்லை என்றும், ஆனால் இந்த வருடம் சென்னையில் கோடை மழை பெய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மலை சார்ந்த பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு 9 மணிக்கு சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், சேலம், கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்திருந்தது. அதேசமயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்” எனத் தெரிவித்திருந்தது. ஆனால், இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அடித்த 5பி நாட்களுக்கு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என தகவல் வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்