SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் கார் ஏ.சி. வெடித்து தீ விபத்து: அதிஷ்டவசமாக கார் ஓட்டுநர் உயிர் தப்பினார்

2019-06-15@ 12:15:20

சென்னை: சென்னையில் கார் ஏசி வெடித்து தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பூர் ஜமாலியா பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவமானது நடந்துள்ளது. இதையடுத்து காரை ஓட்டிச் சென்ற சட்ட கல்லூரி மாணவர் சுயத் காரிலிருந்து தப்பித்து உயிர் தப்பினார். மேலும் அவர் ஓட்டிச் சென்ற காரின் ஏசியில் இருந்து முதலில் புகை கிளம்பியுள்ளது. அதனை தொடர்ந்தே கார் ஏசி வெடித்து மளமளவென தீ பரவியதாக கூறப்படுகிறது.

மேலும் இன்றைய காலக்கட்டத்தில் ஏசி வசதி உள்ள கார்களே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இதனை தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயில் காரணமாக காரில் ஏசி போட்டுக்கொண்டே பயணிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஏசி வெடித்து கார் முற்றிலுமாக எறிந்திருப்பது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கார் ஏசி வெடிக்க என்ன காரணம் என்றும், அவ்வாறு நிகழ்வது சாத்தியமா?  என்பது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்