SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலப்பட நெய் தயாரித்த கடைக்கு சீல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

2019-06-15@ 05:29:29

தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலப்பட நெய் விற்கப்படுவதாக கடந்த 10ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட உணவு  பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் அனுராதா தலைமையில், நேற்று அதிகாரிகள் மேற்கு தாம்பரம் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் மாரிமுத்து (50) என்பவரின் கடையில் கலப்பட நெய் தயாரிப்பதற்கான டால்டா, பாமாயில், நெய் வாசனைக்கான பொருட்கள், கசண்டு என 2.5 டன் அளவில் மூலப்பொருட்கள் இருந்தது  தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கிருந்த ₹2.47 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க முயற்சி செய்தனர். அப்போது கடையின் உரிமையாளர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடைக்கு சீல் வைக்க  கூடாது என தகராறில் ஈடுபட்டார்.இதனையடுத்து அதிகாரிகள் தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்போடு கடைக்கு சீல் வைத்தனர்.மேலும் மற்றொரு கடைக்கு அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வதை அறிந்து  அந்தக் கடை உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு மாயமானார். அந்த கிடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jnu_studentss1

    குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

  • bushfire_aussiee1

    ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

  • asutra_bushfirr1

    ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

  • parani_deepam11

    கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

  • peru_lap

    பெரு நாட்டில் சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்