SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோல்விக்கு பாஜ மேல பழியைப் போட இதுதான் காரணம் என்கிறார்: wiki யானந்தா

2019-06-15@ 04:46:07

கொளுத்துகிற வெயிலின் கோர தாண்டவத்தை தணிக்க கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் பீட்டர் மாமாவும் விக்கியானந்தாவும். ‘‘பல வழிகளில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறாங்க போல..’’ என்று வேதனை வெளியிட்டார் பீட்டர் மாமா.
 ‘‘ரயில்வே விவகாரத்தைதான சொல்ற... தமிழகத்தில் ரயில்வேயில் பணியாற்றும் அதிகாரிகள், கோட்ட மேலாளர்கள் தமிழில் பேசக்கூடாது. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்த விவகாரம்தான்  பற்றிக்கொண்டது. திமுகவின் கடுமையான போராட்டத்தால் இப்ப அதை வாபஸ் வாங்கிட்டாங்க. மும்மொழிக் கொள்கை சரியா எடுபடாத நிலையில், வேற வழியில் கொண்டு வர நினைச்சாங்க. அதுவும் பலிக்காம போயிடுச்சு. கொஞ்சம்  சுதாரிப்பா இல்லாம இருந்தா, ஹைஹைன்னு நம்மள ஆக்கிருவாங்க..’’ என்று சிரித்தபடி சொன்னார் விக்கியானந்தா.‘‘அதிமுக நிலவரம் என்ன..’’ ‘‘சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டத்தில் எந்த பிரச்னையும் வராம கமுக்கமா முடிச்சிட்டோம்ன்ற திருப்தியில் இரட்டை தலைமை இருக்காம். ஆனாலும் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தத்தை  விட்டபாடில்லை. எந்த பக்கம் இருந்து எந்த போஸ்டர் வருமோ என்று எப்பவும் பக்பக்னு இருக்க வேண்டியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

 ‘‘அதிமுக தோல்விக்கு பாஜதான் காரணம் என்கிற மாதிரி சொல்லி அதையும் கட்சிக்காரங்களை நம்ப வச்சிருக்காங்க போலயே.’’ ‘‘ஆமா.. அப்படிச் செய்யாட்டா வாரிசு விவகாரம், சொந்தமா சுருட்டறது எல்லாம் விமர்சிக்கப்பட்டு அம்பலப்பட்டு போவோம் என்கிற பயம் இருக்கும் அல்லவா.. அதான் பாஜ மேல பழியை போட்டாச்சு.. இதனால பாஜவும் பயங்கர காண்டுல  இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் டோஸ் விட்டாராமே..’’‘‘கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடப்பது வழக்கம். சமீப காலமாக இம்முகாமிற்கு அரசுத்துறை உயரதிகாரிகள் வருவதில்லை. மாறாக, தங்களது சகாக்களை  அனுப்பிவிட்டு, எஸ்கேப் ஆகினர். இந்த தில்லாலங்கடி வேலையில் இறங்கும் அதிகாரிகள் யார், யார் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி பட்டியல் போட்டு, தனது அறைக்கு வரவழைத்து, ஒரு பிடி பிடித்து விட்டார். இதனால், அரசுத்துறை  அதிகாரிகள் ஆடிப்போய்விட்டனர். வாயை பொத்திக்கொண்டு, அனைத்து துறை அதிகாரிகளும் கடந்த இரு வாரங்களாக இம்முகாமில் ஆஜராகி வருகின்றனர். கோவை மாநகராட்சி நிர்வாகத்தில், கடந்த ஒரே மாதத்தில் இரு உயரதிகாரிகள் லஞ்ச வழக்கில் கைதாகிவிட்டனர். இது, கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால், கமிஷனர் ஜடாவத் கடுப்பாகி  விட்டார். கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் யார், இவர்களது பின்னணி என்ன என இவரும் லிஸ்ட் போட்டு தயாராக வைத்துள்ளார். எந்த நேரத்திலும் தூக்கியடிக்க காய் நகர்த்தி  வருகிறார். ஒரே நேரத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கையில் சாட்டையை எடுத்துள்ளதால் அதிகாரிகள் ஆடிப்போய் உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘திருடு போன மின்ஒயருக்கு எப்ஐஆர் போடாததால் பிடிஓக்கள் திணறுகிறார்களாமே..’’ ‘‘ஆமா.. வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தில் கீழ்நமண்டி உட்பட 2 ஊராட்சிகளில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான மின்மோட்டார் ஒயர்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு  செய்யாமல் பிடிஓக்களை அலைக்கழிக்கிறார்களாம். இதனால் அவர்கள் செய்வதறியாமல் திகைத்து வருவதுடன், திருட்டு போன மின்ஒயருக்கு தாங்கள் முதல் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம். காரணம், மின்மோட்டார்  பொருத்த வேண்டும் என திட்ட மதிப்பீட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினால் கலெக்டரிடம் வாங்கி கட்ட வேண்டுமே என்ற அச்சம்தானாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இயங்காத நெல் அறுவடை இயந்திரத்திற்கு, பழுது பார்ப்புக்கு பில் போட்டு எடுத்த அரசு அதிகாரிகளை பற்றிய தகவல் இருக்கிறதா சொன்னியே..’’ ‘‘விரிவாகவே சொல்றேன்.. காவேரிப்பாக்கம் தேரடி வீதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இருக்கு. இந்த வங்கியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அறுவடை செய்ய ₹13 லட்சத்தில் நெல்  அறுவடை செய்யும் இயந்திரம் வாங்கப்பட்டது.

ஆனால் வாங்கிய சில மாதங்களிலேயே போதிய பராமரிப்பின்றி நெல் அறுவடை இயந்திரம் பழுதாகி நின்று போனது. நீண்ட நாட்களாக பழுதாகி நின்றதால் அதன் பாகங்கள் துருப்பிடித்ததுடன், இயந்திரமும் முட்புதர்கள் சூழ மண்ணில் புதைந்த  நிலையில் உள்ளது.
இந்நிலையில், நெல் அறுவடை இயந்திரத்தை சீர்செய்ததாக கூறி ₹84 ஆயிரத்துக்கு பில் போட்டு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். நெல் அறுவடை இயந்திரம் துருப்பிடித்து, அதன் டயர்கள் இல்லாமல் ஒரே இடத்தில் பயனின்றி  இருக்கும் நிலையில் அதை பழுது பார்த்ததாக கூறி பணம் கையாடல் செய்த விஷயம்தான் இப்போது காவேரிப்பாக்கம் வட்டார விவசாயிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்