SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தலை நடத்தாம குறைசொல்ல மட்டும் வந்து நிக்கிறதா என அமைச்சர் மீது பாய்ந்த அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-06-14@ 00:54:28

‘‘கிண்டிக்காரர் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார் போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம். டெல்லி தலைமை சொன்னதை கச்சிதமாக செய்து முடித்துவிட்டார். அதனாலதான் இந்த சந்தோஷம். இதையடுத்துதான் சேலம்காரரின் டெல்லி பயணம். ஆட்சி நடத்துவது நீங்களாகவே இருக்கட்டும். அதற்கான உத்தரவை போடுவது எங்களிடம் இருக்கும். அதை நீங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற டெல்லி மேலிடத்தின் உத்தரவை சொன்னார்களாம். அதற்கு இலை தரப்பு ஒரு டிமாண்ட் வைத்துள்ளதாம்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மத்திய அரசின் ஏஜென்சிகளால் எக்காலத்திலும் எந்த வழக்கும் பிரச்னையும் வரக்கூடாது. அது அப்படியே காணாமல் போய்விட வேண்டும். பதிவானவற்றை மிஸ்டேக் ஆப் பேக்டர் என்று சொல்லி எப்ஐஆரையே ரத்து செய்துவிட வேண்டும் என்று கோரிக்கை விட்டாராம். அதற்கு கிண்டிக்காரர் உத்தரவாதம் தரவில்லை என்றாலும் டெல்லி சென்று எல்லாவற்றையும் சொல்லுங்கள் நல்லது நடக்கும். நானும் என் பங்குக்கு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பினாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பேசக் கூடாதுனு சொல்லியாச்சு... இப்போதுதான் டீ கடை, பஜ்ஜி போண்டா கடை, பங்க் கடைகளில் இலை கட்சி தொண்டர்கள் அதிகமாக பேசறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நம்மள டிவி, ரேடியோ, பத்திரிகையில கூப்பிட்டு யாரும் பேட்டி எடுக்கப்போதில்லை. மேடையில் ஏற்றி பேசப்போவதுமில்லை. நேற்று கூட்டத்துக்கு போய் வந்தவர்கள் ரொம்ப சந்தோஷத்தோடவே வந்து இருக்காங்க. அந்த சந்தோஷத்துல ஒரு வீடே கட்டலாம். நாம இப்படி பேசிட்டு போக வேண்டியதுதான் பாக்கி... பீல்ட் ஓர்க் பண்ற நமக்கு எதுவும் இல்லை.

நம்ம வைச்சு வேலை வாங்கிற நிர்வாகிகளுக்கு கரன்சியை, பதவியை வாரி கொடுப்பதாக சொல்லி இருக்காங்க... என்று இப்போது உள்ளூர் எம்எல்ஏ, அமைச்சர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களை எல்லாம் வறுத்தெடுத்து வருகிறார்களாம். இது உள்ளாட்சி மன்ற களப்பணியில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். நாம உள்ளாட்சி தேர்தலில் வேலையை பார்க்கக் கூடாது.

பணம் கொடுத்தால் தேர்தல் பணி.. இல்லையென்றால் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்க்க வேண்டியதுதான் என்று பெருத்த விவாதமே ஓடுதாம். நம்மளோட இந்த விவாதத்தை இலையின் இரட்டை தலைமை தடுக்க முடியாது இல்ல என்று தொண்டர்கள் நக்கலடிக்கிறாங்களாம்...’’ என்று சிரித்தபடி சொன்னார் விக்கியானந்தா.

‘‘சிறைபறவை சிக்கலில் இருப்பது போல தெரிகிறதே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘சிறையில் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் நன்னடத்தை அடிப்படையில் ஊழல் செய்தவர்களை விடுவிப்பதில் சட்டச்சிக்கல் இருக்கிறதாம். கொலை வழக்கு என்றால் கூட உணர்ச்சிவசப்பட்டும், பழிக்கு பழி வாங்கவும், கூலிப்படையாகவும் செய்துவிடுவார்கள். இவர்கள் எதிர்காலத்தில் திருந்தும் ஒரு வாய்ப்புதான் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை.

ஆனால் ஊழல் வழக்கு அப்படியல்ல. அது திட்டமிட்டு பணத்தை சுருட்ட நடத்தும் ஏற்பாடு. இதில் உணர்ச்சிவசப்படும் பேச்சுக்கே இடமில்லை. எனவே இது நன்னடத்தை விதியின் கீழ் வராது. இன்னொரு விஷயம் அபராத தொகை. வெறும் 100 ரூபாய் என்றால் சிறையில் வேலை செய்ததற்கு பணம் கிடைக்கும், அதை கொடுத்துவிடலாம்.

கோடிக்கணக்கான ரூபாய் என்றால் ஐடி, வருவாய் புலனாய்வு துறை உள்பட பலவும் எப்படி அந்த பணம் வந்தது என்று தோண்ட ஆரம்பிக்கும். அப்போது தேவையில்லாமல் இன்னொரு வழக்கை சந்திக்க வேண்டி வரும். அதனால் சிறைப்பறவை வெளியில் வருவது சிக்கலான காரியமே..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ தேர்தல் நடத்த மாட்டாங்க போலிருக்கே ’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்துல ஒரு மீட்டிங் நடந்தது. அதுல பங்கேற்ற அமைச்சர் ஒருவர், திடீரென எழுந்து, ‘‘மாவட்டத்துல குடிநீர் தட்டுப்பாடு இருக்கு... கழிவுநீர், குப்பைகள் தேங்கி கிடக்கு.. அடிப்படை வசதிகளை கூட செய்ய மாட்டீங்களா’’ என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நிற்க வைத்து, பொதுமக்கள் அத்தனை பேரின் முன்னிலையில் கடும் காட்டத்துடன் பேசினாராம்... பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சர் தங்களிடம் கடிந்து கொண்ட விவகாரத்தால் அதிகாரிகள் தரப்பு கடும் டென்ஷனில் உள்ளதாம்.. மாவட்டத்துல உள்ள பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் சுத்தமாக நிதியில்லை.

நிர்வாக செலவுகளுக்கே சிக்கலாய் கிடக்கு... குடிநீர் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பைல்களுக்கு, தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரலை... உள்ளாட்சித்தேர்தல் நடத்தி இருந்தாலாவது, நிர்வாகம் சீர்பட்டிருக்கும். அதையும் இந்த அரசு செய்ய மாட்டேங்குது... தங்கள் ஆட்சி மீதே பல குறைகள், கறைகள் இருக்கும்போது, அமைச்சர் தங்களைப்பற்றி எப்படி குறை கூறலாம் என்று கொந்தளித்தார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கும்மாளம் போடும் ஊராட்சி செயலர்கள் கதை இருக்குன்னியே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சொல்றேனே.. வேலூர் ஒன்றியத்தின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லையில் உள்ள ஊராட்சிகளின் செயலாளர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஓசூர் பகுதியில் ஒரு தோப்பில் கூடி விடுகிறார்களாம். அங்கு சரக்கும், கறி விருந்துமாக பொழுதை போக்குகிறார்களாம். இவர்கள் தங்கள் ஊராட்சியில் எந்த பணியுமே செய்யாமல் அல்லது அரைகுறையாக பணி முடித்து செய்து முடித்தது போல கணக்கு காட்டுகிறார்களாம்.

அதனால் இவர்கள் காட்டில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறதாம். அதேநேரத்தில் இவர்கள் பில் செட்டில்மென்டுக்காக சிவனின் மனைவியின் பெயரை கொண்ட ஒன்றிய பெண் அதிகாரிக்கு கடும் அழுத்தம் கொடுக்கிறார்களாம். இதனால் இவர்களுக்கும், பெண் அதிகாரிக்கும் எப்போதுமே முட்டல் மோதல்தானாம். இதுதொடர்பாக அந்த பெண் அதிகாரி, ஊரக வளர்ச்சித்துறையின் உயர்அதிகாரிக்கு அறிக்கை கொடுக்க தயாராகி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hongkongprotest247

  ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மற்றும் மர்ம கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

 • governorresignus

  பெண்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கிய பியூர்டோ ரிக்கோ தீவின் ஆளுநர்: உடனே பதவி விலகக்கோரி மக்கள் பிரம்மாண்ட பேரணி

 • britainthunder

  பிரிட்டன் நாடுகளில் வெயில் வாட்டியெடுத்த நிலை மாறி நேற்று அதிபயங்கர இடி மின்னலுடன் மழை

 • imrankhantrumphmeet

  முதன் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: புகைப்படங்கள்

 • 23-07-2019

  24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்