SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் நடக்கப்போவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-06-13@ 00:21:45

‘‘என்ன விக்கி இலை கூட்டத்துல ஏக ரகளைனு பேசிக்கிறாங்க...’’ என்றார் பீட்டர்மாமா.‘‘உள்ளே பேசியது இருக்கட்டும்.. வெளியிேலயே செங்கோட்டையனை பொதுச் செயலாளர் ஆக்குங்கள் என்று போஸ்டர் அச்சடித்து தலைமைக்கு கிலி ெகாடுத்தாங்க... போஸ்டர் அடித்தவர்களை செங்கோட்டையன் கடிந்து ெகாண்டாராம்.  கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவியை கேட்டார்களாம். சிலர் தன் வயது, கட்சிக்கு ஆற்றிய பணிகளை குறிப்பிட்டும் விசுவாசத்தை சுட்டிகாட்டியும் குறைந்தபட்சம் வாரிய தலைவர் பதவியாவது கொடுங்க... 10க்கும்  மேற்பட்ட வாரிய பதவிகள் காலியாக இருக்கு என்று கோரிக்கை வைத்தார்களாம்... அப்புறம் ராஜ்ய சபா சீட் குறித்து பேச்சு வந்தபோது அதை யாருக்கு என்பதை டிசைட் செய்துவிட்டோம். நீங்கள் கேட்டதை பரிசீலிக்கிறோம். அத்தோடு  விடுங்கள் குழுவில் பேசிய முக்கியஸ்தர்கள் சொன்னார்கள்’’ என்றார் விக்கியானந்தா.

‘வேற ஏதாவது விஷயம்...’’ ‘‘ஒற்றை தலைமை விஷயத்தை பொறுத்தவரை அதை செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் முடிவு செய்யும். இப்போதைக்கு அது பற்றி பேசாதீங்க. தேனியும் சேலமும் இணைந்து தான் செயல்படுகிறார்கள். அவர்கள் தான் அடுத்த பொதுத்  தேர்தலையும் சந்திப்பார்கள். நம் தோல்விக்கு பாஜ மட்டும் காரணமல்ல. சிலர் விலை போய்விட்டார்கள். சிலர் பணத்தை வாங்கிக் கொண்டு பதுக்கிவிட்டார்கள். சிலர் ஜெயலலிதா இல்லாத கட்சி ஜெயிக்கவாப்போகிறது என்று அசட்டையாக  இருந்துவிட்டார்கள். இதைவிட முக்கியம் அமைச்சர்கள் பலர் தொண்டர்களை மதிப்பதே இல்லை... தொண்டர்களின் கருத்து அறிந்து முடிவெடுத்தவர் எம்ஜிஆர். அந்த பெருமை கொண்ட கட்சி இப்போ இந்த லெவலுக்கு இறங்கிப்போயிருக்கு..  கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தாதீங்க. உங்கள் கோரிக்கைகளை தலைமை கழகத்தில் கொடுங்க.. கண்டிப்பாக அதில் நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்று சொன்னார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிண்டி விவிஐபியை சேலம்காரர் திடீர்னு சந்தித்ததற்கு என்ன காரணம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘முதல் காரணம் நிச்சயமாக நிதி ஆயோக் கூட்டம் இல்லை. சட்டசபை கூடினால் முதலில் நம்பிக்கை இல்லா தீர்மானம் ெகாண்டு வந்து நெகட்டிவ்வாக ஆகிவிட்டால் என்ன செய்வது என்று ஆலோசித்தார்களாம். அதை கண்டுக்காதீங்க  என்று சொல்லிட்டாராம். எல்லாம் மேலிடத்தில் உள்ள உள்துறை பார்த்துக் கொள்ளும் என்று தைரியம் சொன்னாராம். எப்போது சட்டசபை கூட்டத் தொடரை கூட்டலாம் என்று ஆலோசனை கேட்டார்களாம். அதற்கு கிண்டி விவிஐபி ஜூலையில்  வைத்து கொள்ளலாம் என்று கிரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம். எதுவாக இருந்தாலும் நான்தான் உள்துறைக்கு அறிக்கை தர வேண்டும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாராம். அப்புறம் அமைச்சரவை மாற்றும் விஷயம்  மற்றும் விரிவாக்கத்தை பற்றி சொன்னார்களாம். குறைந்த அளவில் மட்டுமே மாற்றம் நடப்பதால் அதை என் மாளிகையிலேயே ைவத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். அத்தோடு பேரறிவாளன் மேட்டர், உள்ளாட்சி தேர்தல்  உள்ளிட்டவற்றை பேசினாங்களாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். முன்பை விட நீங்கள் தைரியமாக ஆட்சியை பாருங்க மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி இருக்கிறாராம்...’’ என்றார்  விக்கியானந்தா.
‘‘குமரியில் என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘குமரி மாவட்டத்தில் மொத்தம் 55 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் முளகுமூடு பேரூராட்சியில் செயல் அலுவலராக பொறுப்பு வகிப்பவர் திருவிதாங்கோடு பேரூராட்சியின் செயல் அலுவலர் ஆவார். இதனால் திருவிதாங்கோடு  பேரூராட்சியில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவு வந்து பணியாற்ற தொடங்குகிறார். இந்த பணி இரவு 10 மணி வரையும் நீடிக்கிறது. செயல் அலுவலர் அலுவலகத்தில் பணியில் இருக்கும்போது பெண் பணியாளர்கள் உள்ளிட்டோரும்  மாலை 6 மணிக்கு வீடு திரும்ப முடியாமல் இரவு 10 மணி வரை அங்கேயே இருந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் பகல் வேளையில் பல்வேறு கோரிக்கைகளுடன் பேரூராட்சி அலுவலகத்திற்கு செயல் அலுவலரை காண  வருகின்ற மக்கள் மாலை வரை காத்திருந்துவிட்டு அலுவலக நேரம் முடிந்த பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்ற நிலை உள்ளது. மறுநாள் வந்து பொதுமக்கள் கேட்டால் செயல் அலுவலர் இரவு வந்து சென்றுவிட்டதாக கூறுகின்றனர்.  மாவட்டத்தில் பல பேரூராட்சிகளில் இதுதான் காட்சிகளாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகளின் ஆதிக்கமே இருந்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் காலி பணியிடம் காரணமாக கட்டிட  வரைபட அனுமதி உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்களுக்கு தீர்வு வராமல் உள்ளன என்று குமுறுகின்றனர் பேரூராட்சி பகுதி மக்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிப்ட் பாக்ஸ் நசுங்கி போச்சு போல ...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மக்களவை தேர்தல் தோல்வி அதிமுகவினரை விட கிப்ட் தரப்பை விட மிகவும் வாட்டியுள்ளது. மக்களவை தேர்தலிலும், 22 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் டெபாசிட் கூட வாங்கவில்லை கிப்ட் தரப்பு.. இந்நிலையில் இனிமேலும்  இந்த கட்சியில் நீடிப்பதால் எந்த பலனும் இல்லை என அதிமுகவை நோக்கி கிப்ட் தரப்பினர்  நடை கட்டத் துவங்கி விட்டனர். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாஜி எம்எல்ஏக்கள் முதலில் அதிமுகவில் ஐக்கியமாகி விட்ட  நிலையில் மூன்று மாவட்ட செயலாளர்கள் இருந்த கிப்ட் கட்சியில் இருந்த நெல்லை புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு என இரண்டு மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இணைந்து விட்டனர். தற்போது மாநகர் மாவட்ட செயலாளர் மட்டுமே  எஞ்சியிருக்கிறார். நெல்லையில் கிப்ட் கை ஓங்கியிருந்த நிலையில் தற்போது புறநகருக்கு மாவட்ட செயலாளரே இல்லாத நிலையில் கிப்ட் உள்ளது. புதிய மாவட்ட செயலாளர் நியமனம் குறித்து பேச்சு கூட எழாத நிலையில் அமமுக கூடாரம்  முழுவதும் காலியாகி வருகிறது...’’ என்றார் விக்கியானந்தா.   


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jnu_studentss1

  குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

 • bushfire_aussiee1

  ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

 • asutra_bushfirr1

  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

 • parani_deepam11

  கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

 • peru_lap

  பெரு நாட்டில் சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்