SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்மேற்கு பருவமழை காரணமாக குமரி உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

2019-06-12@ 16:47:59

சென்னை: தென்மேற்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த சனிக்கிழமை கேரளாவில் தொடங்கியது. இந்த பருவ மழை துவங்கிய பின் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்தவிதமான மழையும் இதுவரை கிடைக்கவில்லை. வெப்பச்சலனம் காரணமாகவே இதுவரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் கன்னியாகுமரி, கோவை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்படவில்லை.

அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அனல் காற்று வீசும். சாதாரணமாக இருக்கும் வெப்பநிலையை விட 2-3 செல்சியசுக்கு அதிகமான வெப்பநிலை நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருக்கும். எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லவேண்டாம். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்தில் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். இதுவரை, நீலகிரி மாவட்டம் தேவலாவில் 10 செ.மீ, கூடலூரில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 6 செ.மீ. கோவை சின்னக்கல்லாறில் 4.செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 4செ.மீ மழை பெய்துள்ளது என்று கூறியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்