SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2019-06-12@ 15:18:13

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின் போது, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதும், நீதிபதி சசிதரன் விசாரிக்க மறுத்துவிட்டார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இருந்தபோது, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சசிதரன், தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், வேறு அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, உடனடியாக வேறு அமர்வை அமைக்க வேண்டும் என ஆலை தரப்பில் தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வில் முறையிடப்பட்டது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி நேற்று அறிவித்தார். எனவே, இந்த வழக்கு இன்று அல்லது நாளை பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் தங்களை சேர்க்க கோரிய வைகோ, பாத்திமா ஆகியோரின் மனு ஏற்க்கப்பட்டுள்ளது. வைகோவையும், பாத்திமாவையும் வழக்கில் ஒருதரப்பாக சேர்க்க உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கில் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை ஒருதரப்பாக சேர்க்க முடியாது என கூறிய உயர்நீதிமன்றம், அவர்களது கோரிக்கையை நிராகரித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்