SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுபோதையில் இருப்பவர்களின் மர்ம உறுப்பை துண்டித்து வந்த சைக்கோ கொலையாளி மானாமதுரையில் கைது

2019-06-12@ 10:29:39

மானாமதுரை: வடசென்னை மக்களை அச்சுறுத்தி வந்த சைக்கோ கொலைகாரன் முனியசாமி மானாமதுரை ரயில் நிலையம் அருகே கைது செய்யப்பட்டுள்ளான். நள்ளிரவில் ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் தனியாக போதையில் விழுந்து கிடக்கும் நபர்களை குறித்து சைக்கோ கொலைகாரன் தாக்குதல் நடத்தியுள்ளான். இதனால் வடசென்னை மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளிவர முடியாமல் அச்சத்தில் ஆழந்தனர்.

இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான சைக்கோ கொலைகாரன் வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டனர். சென்னை மாதவரம் பகுதி ரெட்டேரியில் கடந்த மாதம் 26-ம் தேதி மேம்பாலத்திற்கு அடியில் போதையில் படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் மர்ம உறுப்பை சைக்கோ கொலையாளி துண்டித்ததில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அடுத்த இரண்டு நாட்களில் ரெட்டேரி மேம்பாலம் அருகே போதையில் படுத்திருந்த நாராயணசாமி என்பவரின் மர்ம உறுப்பை துண்டித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சைக்கோ கொலைகாரனை பிடிக்க     காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மானாமதுரை ரயில் நிலையம் அருகே சைக்கோ கொலைகாரன் முனியசாமியை போலீசார் கைது செய்தனர். மானாமதுரையில் சைக்கோ கொலையாளியை சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்த உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்