SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெட்ரோ நிறுவன ஷேர் ஆட்டோவை 3.49 லட்சம் பேர் பயன்படுத்தினர்

2019-06-12@ 00:43:42

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ வசதியை இதுவரை 3 லட்சத்து 49 ஆயிரத்து 289 பேர் பயன்படுத்தியுள்ளனர். கடந்த மே மாதத்தில் மட்டும் 45 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக பல போக்குவரத்து இணைப்பு நடவடிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் செய்து வருகிறது. இதன்படி 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ இணைப்பு சேவைகள் ரூ.5 கட்டணத்துடன் குறிப்பிட்ட பாதைகளில் இயங்குகின்றன.

அதேபோல ஷேர் டாக்சி சேவைகள் 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.10 கட்டணத்தில் செயல்படுத்தப்படுகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும்  இந்த இரண்டு விதமான சேவைகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் 45 ஆயிரத்து 494 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இதில் 7288 பயணிகள் ஷேர் டாக்சி சேவைகளையும், 38 ஆயிரத்து 206 பயணிகள் ஷேர் ஆட்டோர சேவைகளையும் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 3 லட்சத்து 49 ஆயிரத்து 289 பயணிகள் இந்த ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 முதல் இந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை பயன்படுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்