SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்கள் லீக் கிரிக்கெட் ஜூன் 15, 16ல் தேர்வு முகாம்

2019-06-12@ 00:16:44

சென்னை: பெண்கள்  லீக்  கிரிக்கெட் அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு முகாம் ஜூன் 15, 16 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இது  குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அளவில் 2019-20ம் ஆண்டு பெண்கள் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்காக வீராங்கனைகள் தேர்வு முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. யு16 அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு ஜூன் 15ம்தேதி  காலை 7 மணிக்கு நடைபெறும். வீராங்கனைகள் 1-9-2003 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

அதேபோல் யு19 அணிகளுக்கான தேர்வு முகாம் ஜூன்  15ம்தேதி  மாலை 3 மணிக்கு நடைபெற உளளது. இதில் பங்கேற்போர் 1-9-2000 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க  வேண்டும். யு23 வீராங்கனைகள் தேர்வு ஜூன்  16  காலை 7 மணிக்கு நடைபெறும். இதில் 1-9-1996 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பங்களை www.tnca.in  என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்வதுடன், டிஎன்சிஏ அலுவலகத்திலும் வேலை நேரத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்