SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராணுவ தளபதியை மீன்களுக்கு இரையாக்கி கொடூரமான முறையில் கொலை செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

2019-06-11@ 12:58:41

பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ தளபதியை மீன்களுக்கு இரையாக்கி கொடூரமான முறையில் கொலை செய்துள்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த ஆத்திரத்தில் அதற்கு ஏற்பாடு செய்த தூதர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேரை கிம் ஜாங் உன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்றார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராணுவ புரட்சி நடத்த முயற்சித்ததாக ராணுவ தளபதி ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

தலைநகர் பியாங்யாங்கில் உள்ள தனது வீட்டில் தளபதியின் கை மற்றும் உடல் பகுதிகளை வெட்டி பிரானா மீன்களுக்கு இரையாக்கியுள்ளார். இதனிடையே வடகொரியாவில் 600-க்கும் மேற்பட்டோருக்கு பொதுஇடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆதாரத்துடன் கண்டறியபட்டுள்ளதாக நீதித்துறை குழு தெரிவித்தனர். கடந்த 2013-ம் ஆண்டு தமது உரையின் போது சத்தமாக கைதட்டவில்லை என்பதற்காக சொந்த மாமாவையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

தந்தையிடம் இருந்து ஆட்சி பொறுப்பை பெற்ற பிறகு கிம் ஜாங் உன் இதுவரை அரசில் உயர் பதவி வகித்த 16 பேரை கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வடகொரியாவில் தனக்கு எதிராக நிறைய கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். அவர்களுக்குப் பயந்தபடியே கிம் ஆட்சி நடத்தி வருகிறார். கிளர்ச்சியாளர்களுக்கும் தன் நம்பிக்கைக்குரியவர்களுக்கும் பயத்தைக் காட்டவே அவர் இவ்வாறு தொடர் கொலைகள் செய்துவருவதாக’ இங்கிலாந்து உளவுத்துறை தெரிவிப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்