SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டோமொபைல்

2019-06-09@ 00:07:55

கவாஸாகி களமிறக்கும் புதிய பைக்:
கவாஸாகி நிறுவனம், டிரையம்ப் போனிவில் பைக்கிற்கு போட்டியாக டபிள்யூ800 என்ற புதிய மாடல் பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இப்புதிய மோட்டார் சைக்கிள் அடுத்த மாதம் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதேசமயம், டபிள்யூ800 மாடல் மோட்டார் சைக்கிள், இசட்900 ஆர்எஸ் பைக்கை ரீபிளேஸ் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த பைக்கில் 773 சிசி திறனை வெளிப்படுத்தும் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 6,000 ஆர்பிஎம்மில் 48எச்பி பவரையும், 4,800 ஆர்பிஎம்மில் 62.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

இந்த பைக், ஸ்ட்ரீட் வெர்ஷன் ரிலேக்ஸாக ரைட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தொழில்நுட்பங்களை இதன் இன்ஜின் பெற்றுள்ளது. மேலும், இந்த பைக்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் 1,465 மிமீ வீல் பேஸ், ரைடருக்கு அலாதியான பயண அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இது, தினந்தோறும் ரைடருக்கு, பைக்கை இயக்குவதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருக்கிறது. அதற்கேற்ப, இதன் இன்ஜின் திறன் மற்றும் கட்டுப்பாடு உள்ளிட்டவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு, இதன் இருக்கை 770 மிமீ இடைவெளியில் சொகுசான இருக்கை அமைப்பை பெற்றுள்ளது. மேலும், அனைத்து சாலைகளிலும் சிறப்பாக செல்லும் வகையில், 100/90-18 அளவு கொண்ட டயர் முன்பக்கத்திலும், 130/80-18 அளவு கொண்ட டயர் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் பாதுகாப்பு வசதிகளாக, 320மிமீ கொண்ட டிஸ்க் பிரேக் முன்பக்கத்திலும், 270 மிமீ கொண்ட டிஸ்க் பிரேக் பின்பக்க வீலிலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஏபிஎஸ் வசதியும் இதில் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பிரத்யேக வசதிகளை கொண்டு, மிகவும் ஸ்டைலான லுக்கில் இருக்கும் இந்த டபிள்யூ800 பைக்கை கவாஸாகி நிறுவனம், இந்திய மதிப்பில் 7 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடிக்கு  இணையாக  க்ரெட்டா:
சொகுசான ஆடி கார்களுக்கு இணையான சிறப்பம்சத்துடன், ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார் தயாராகி வருகிறது. ஹூண்டாய் நிறுவனம், அதன் க்ரெட்டா மாடலை 2020ம் ஆண்டிற்கு ஏற்ப தயார் செய்து வருகிறது. அவ்வாறு, தயாராகி வரும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரை முழுவதும் டிஜிட்டல் மயத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், சொகுசு காரான ஆடி காருக்கு இணையான சிறப்பம்சங்களை, புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் பெற உள்ளது. இந்த எஸ்யூவி ரக காரில் ஹெட்-அப் டிஸ்பிளே அம்சமும் வழங்கப்பட உள்ளது. கூடுதலாக, அண்மையில் வெளியாகிய ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட்டிருக்கும் ப்ளூ லிங்க் உள்ளிட்ட சிறப்பான கனெக்டிவிட்டி அம்சங்களும், புதிய தலைமுறை க்ரெட்டாவில் இடம்பெற உள்ளது. இவற்றுடன், பிரத்யேக அம்சமாக ஹூண்டாய் வெர்னா காரில் இருப்பதைப்போன்ற, கூல்ட் சீட் முன்பக்கத்தில் கொடுக்கப்பட உள்ளது.

இப்புதிய தலைமுறை க்ரெட்டா, 2,600 மிமீ அளவிலான லாங் வீல் பேஸ் பெற இருக்கிறது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் க்ரெட்டாவை காட்டிலும் இது நீளமானதாக காட்சியளிக்கிறது. இதனால், காரில் பயணிப்பவர்களுக்கு மிக சவுகரியமான இடவசதி கிடைக்கிறது. அதேபோன்று, இதன் பூட் ரூமும் பெரிய அளவை கொண்டதாக இருக்கிறது. 2020ம் ஆண்டு க்ரெட்டா பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எரிபொருள் இன்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இவை இரண்டுமே, 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டாவில் 1.6 லிட்டர் கொள்ளளவு கொண்ட இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பழைய க்ரெட்டாவை காட்டிலும் குறைவான கெபாசிட்டியாக இது காணப்பட்டாலும், சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், புதிய 1.5 லிட்டர் இன்ஜின் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த இன்ஜினின் முழுமையான செயல்திறன் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதேசமயம், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின்களிலும், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய க்ரெட்டாவும், தற்போதைய க்ரெட்டாவை போன்று முன்பக்க வீல் இயக்கம் கொண்டதாக இருக்கிறது. ஆனால், புதிய க்ரெட்டாவில் உள்ள பிஎஸ்-6 தரத்திற்கு ட்யூன் அப் பெற்று விற்பனைக்கு வரவிருக்கிறது. இப்புதிய மாற்றங்களை பெற்ற அடுத்த தலைமுறை க்ரெட்டா வருகின்ற 2020ம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டர்:
வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரின் பிரிமீயம் வேரியண்ட்டாக க்ளப் ரேஞ்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெஸ்பா க்ளஸ் ரேஞ்ச் ஸ்கூட்டர் அஸுரோ புரொவென்ஸா, மேஸ் க்ரே, கிளாஸி யெல்லோ மற்றும் கிளாஸி ரெட் ஆகிய 4 புதிய வண்ணங்களில் கிடைக்கும். மேலும், பிரேக் லிவர், கிராப் ரெயில் கைப்பிடி உள்ளிட்ட பாகங்கள் பளபளப்பான கருப்பு வண்ண பினிஷிங் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வண்ணங்கள் மற்றும் கருப்பு வண்ண பினிஷிங் மூலமாக ஸ்கூட்டர் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போன் இணைத்துக்கொள்வதற்கான பியாஜியோவின் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதன்மூலமாக, சர்வீஸ் ரிமைன்டர், அவசர காலத்தில் நெருங்கியவர்களுக்கு உடனடியாக தொடர்பு கொள்வதற்கான வசதியை அளிக்கிறது.மேலும், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பெரிய பார்க்கிங் வளாகங்களில் வண்டி இருக்கும் இடத்தை எளிதாக கண்டறிய முடியும். இந்த கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பமானது ஜெர்மனியை சேர்ந்த ஹெல்லா நிறுவனம் உருவாக்கி தந்துள்ளது.புதிய வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டரில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் சிங்கிள் சைடு ஆர்ம் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 150 மிமீ டிரம் பிரேக்கும், பின்புறத்தில் 140 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. இப்புதிய வெஸ்பா க்ளப் ரேஞ்ச் ஸ்கூட்டர், 72,190 புனே எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தனித்துவமான ஸ்கூட்டரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்