SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யாசின் மாலிக் பேச்சு, போலீசார் விசாரணை

2013-05-19@ 02:59:16

கடலூர்: இலங்கை பிரச்னைக்கு உலகம் முழுவதும் குரல் ஓங்கி இருக்கிறது என்று கடலூரில் யாசின் மாலிக் கூறினார். காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கடலூர் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசியதாவது: இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது. தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை. காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தால் விடுதலை போராட்டத்தை முடக்கிவிட முடியாது. போராட்டத்தில் மனிதர்கள் கொல்லப்படலாம். ஆனால் தத்துவத்தையும். கொள்கைகளையும் அழித்துவிட முடியாது என்றார். காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கடலூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

how do abortion pill work cost for an abortion misoprostol abortion
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்