SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் பெடரர்

2019-05-27@ 00:15:13

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தகுதி பெற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் லாரென்சோ சொனெகோவுடன் நேற்று மோதிய பெடரர் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீரர்கள் ஸ்டெபனா சிட்சிபாஸ் (கிரீஸ்), கெய் நிஷிகோரி (ஜப்பான்), மரின் சிலிச் (குரோஷியா), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் சுற்றில் 1-6, 3-6, 1-6 என்ற நேர் செட்களில் பொலிவியாவின் ஹுகோ டெல்லியனிடம் வீழ்ந்தார்.

கெர்பர் அதிர்ச்சி: மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 4-6, 2-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அனஸ்டேசியா பொடபோவாவிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஸ்பெயின் நட்சத்திரம் கார்பினி முகுருசா தனது முதல் சுற்றில் 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்டை 2 மணி நேரம் போராடி வென்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

  • airportchina2019

    சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்