SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

2019-05-27@ 00:14:20

கொல்கத்தா: பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல், இந்தியாவில் மேற்கு வங்கம், அந்தமானிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 புள்ளிகளாக பதிவானது. இங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில், மேற்கு வங்க மாநிலம் பன்குரா மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 புள்ளிகளாக பதிவானது. அதிர்ஷ்டவசமாக இதனால் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், மக்கள் அச்சத்தில் வீடுளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அச்சம் நீங்கி வீடுகளுக்கு செல்வதற்கு நீண்ட நேரம் ஆனது. இந்தியாவைத் தொடர்ந்து, தென் அமெரிக்க நாடான பெருவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8 ஆக பதிவானது. இது அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மோயாம்பா நகரில் இருந்து 180 கி.மீ தொலைவில், பூமியின் 109 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 புள்ளிகளுக்கு மேல் சென்றாலே கட்டிடங்களில் பாதிப்புகள் உருவாகும். இதனால், பெருவில் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், முழு விவரம் வெளியாகவில்லை. பெருவைத் தொடர்ந்து, கொலம்பியா, ஈகுவடார் நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்