SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதியா? 3 வாரத்தில் முடிவு

2019-05-27@ 00:04:07

மெல்போர்ன்: பிரபல தொழில் அதிபர் அதானியின் கார்மிச்சைல் நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. இந்த சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியை அனுமதிப்பது குறித்த இறுதி முடிவு, மூன்று வாரத்தில் எடுக்கப்படும்  என்று அந்த நாட்டில் உள்ள குயின்ஸ்லேண்டு மாகாணத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய இந்த திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் அனுமதி கிடைத்ததும் சில வாரங்களில் பணியை துவக்கிவிடுவோம் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சை நீடிப்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் திட்டம் முடங்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்டு மாகாணத்தின் மத்தியில் உள்ள காலிலீ படுகை பகுதியில் கார்மிச்சைல் நிலக்கரி சுரங்கத்தை கடந்த 2010ல் அதானி குழுமம் வாங்கியது.

நாட்டின் வடபகுதியில் உள்ள போவென் அருகே அபோட் பாயிண்ட் துறைமுகம் அருகே இந்த நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டால், கிரேட் பாரியர் ரீப் வேல்டு ஹெரிடேஜ் பகுதியில்  சுற்றுச்சூழல் பெரும் அளவில் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பு, நிலக்கரி துகள்களால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை குறித்து அடுத்த மூன்று வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதன் பின்னர் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி கொடுப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும்  என்று குயின்ஸ்லேண்டு முதல்வர் அன்னஸ்டாசியா பாலஸ்சுக் தெவித்தார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்