SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேறு கட்சிகளில் இணைய தயாராகி வரும் கிப்ட்பாக்ஸ் கட்சி ஆட்களை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2019-05-26@ 00:37:29

‘‘என்ன விக்கி கட்சியை கலைக்கிற மாதிரி ஏதாவது உங்களுக்கு தகவல் வந்ததா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அது எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்றேன் கேளு. நாடாளுமன்ற தேர்தலில் கிப்ட்காரர் ஒரு சீட் அல்லது சட்டசபை தேர்தலில் ஒரு சீட் ஜெயித்து இருந்தால் கூட கட்சியில் பூகம்பம் வெடித்து இருக்காது... ஆனால்  ஜெயிக்காதது மட்டுமில்ல டெபாசிட்டும் பறிபோனது. இன்னும் 2 வருஷத்துக்கு தோற்றுபோன கட்சியின் தலையின் கீழ் இனிமேலும் இருந்தால் வருவாய் போகும்... பிரச்னைகள் வந்தால் சிறைக்கு போக வேண்டி வரும்னு நினைக்கிறாங்களாம்...  அதனால தங்களுக்கு தோதான கட்சிகளில் இணைய முடிவு செய்து இருக்கிறார்களாம்... காரணம் என்ன என்று விசாரித்தால், நான்கு சுவர் போன்று சில நிர்வாகிகள் மட்டுமே கிப்ட்காரரை சூழ்ந்து கொண்டு தலைவா நாமதான் ஜெயிப்போம்...  ஆட்சி நம்மிடம்தான்னு சொல்லி உசுப்பேற்றியே கிப்ட்காரரை தோற்கடிச்சுட்டாங்க என்று ஒரு தரப்பும்... தொண்டர்களிடம் அவரின் நெருக்கம் ெசால்லிகொள்ளும்படி இல்லை என்று மற்றொரு தரப்பும் குற்றம்சாட்டுகிறார்கள்... இப்படி  குற்றம்சாட்டும் நபர்கள் எல்லாம் வேறு கட்சியில் இணைய மனு போட்டவர்களாம்... இதில் மாஜி எம்எல்ஏக்கள் முதலிடத்தில் இருப்பது இன்னொரு சுவாரஸ்யமான தகவல்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறைப்பறவையை சந்திக்கப்போறாராமே, ஏன்..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கர்நாடகாவை சேர்ந்த புகழானவர் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தன்னை தோற்கடிக்க சதிகள் நடப்பதாக புகார் சொன்னார்... ஆனால் இப்படி ஒரு மோசமான தோல்வியை அவர் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார். காரணம் சில ரவுண்டில் 26  ஓட்டு இன்னொரு ரவுண்டில் 28 ஓட்டு இன்னொரு ரவுண்டில் 54 ஓட்டு என்று ஏறக்குறைய பல ரவுண்டுகளில் மூன்று இலக்கத்தையே புகழானவர் வாங்கவே இல்லை. காரணம் கிப்ட் தரப்பு அங்கே வேலையே செய்யவில்லையாம்...  கிப்ட்காரருக்கு ஒரு சந்தேகம் தன்னை பற்றி தப்பு தப்பாக சிறைபறவையிடம் புகழ் போட்டு தருகிறாரா என்ற சந்தேகம்தான் அது. அதற்கு ஏற்றார் போல தேர்தல் முடிவு வந்ததும் அதை அப்படியே தன் சோர்ஸ் மூலம் சிறைபறவையிடம் காட்டி  இருக்கிறார் புகழ். இதனால டென்ஷனான சிறைப்பறவை என்னை நல்ல முறையில் சிறையில் கவனித்து கொள்வதற்கு காரணமே புகழ்தான். அவரை இப்படி கேவலமாக நடத்தியது சரியில்லை என்று கொந்தளித்துவிட்டாராம்... அதனால  தோற்ற கட்சியின் தலைமையில் மாற்றம் வரலாம் என்றே தோன்றுகிறது. அதில் கிப்ட்காரருக்கு மாற்றாக வேறு யாரை கொண்டு வரலாம் என்பதே இப்போது சிறைப்பறவைக்கு முன்பு உள்ள கேள்வி...’’ என்று சொல்லி முடித்தார்  விக்கியானந்தா.

‘‘டபுள் கேம் ஆடியதற்காக தம்பி வருத்தப்பட்ட கதையை சொல்லேன்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பேசாமல் கொடுத்ததை வாங்கிக் கொண்டு ஒதுங்கி இருக்கலாம்... அதில் ஜெயித்தும் இருக்கலாம். இப்போது உள்ளதும் போச்சுடா என்கிற கதையாக ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் பேரம் பேசியதும்... தாமரைக்கு கீழ் படிந்து சீட்  ஒதுக்கியதும்தான் இலை காலை வாரிவிட காரணமாம். கோயம்பேடுகாரர் கோபத்தின் உச்சியில் நம்ம கட்சி தோல்விக்கு நீயும், உன் தம்பியும்தான் காரணம். உடம்பு சரியில்லை என்று உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டீர்களே என்று கொந்தளித்துவிட்டாராம்... அவரை சமாதானம் செய்த கோயம்பேடுகாரரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் பார்த்துக்  கொள்ளலாம்... மாம்பழம் நமக்கு கை கொடுக்கவில்லை. கடந்த தேர்தல் போலவே இப்போதும் காலை வாரி விட்டார்கள் என்று புலம்பி தள்ளிட்டாங்களாம்... அவரின் நிலையை பார்த்த கோயம்பேடுகாரர் சற்று அமைதியானதாக ஒரு பேச்சு  ஓடுது...’’ என்றார் விக்கியானந்தா.‘‘சேலத்தை தேனி ஓவர்டேக் செய்ய நினைக்குதா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இரண்டு பேருக்கும் இருந்த ஒரே தொல்லை தம்பிதான். அவர் இப்போது ஒரு பெண் வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்து இருப்பதால் வாய் திறக்க மறுக்கிறாராம். கிப்ட், சிறைபறவை, சேலம், தாமரை என்று ஒவ்வொரு இடத்திலும்  ஒருவரை மாற்றி ஒருவரை போட்டு கொடுத்து அரசியல் நடத்தி கொண்டு இருந்தார். இப்போது அதிலும் மண் விழுந்துவிட்டது. இப்போது சேலம்காரரின் கால்களில் முழு சரணாகதி அடைந்துவிட்டார் என்றே சொல்லலாம். தமிழகத்தில்  கட்சியை வளர்க்க ராஜ்யசபா எம்பியாக்கி அதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு இணையமைச்சர் பதவி வழங்க தாமரை முடிவு செய்து இருக்கிறதாம். அவர் சத்தியமாக தென் மாவட்டத்தை சேர்ந்தவரில்லை என்பது மட்டும்  உறுதியாம்... ’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மூன்றாம், நான்காம் இடம் பிடித்த கட்சிகள் என்ன நினைக்கிறார்கள்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அவர்கள் சட்டசபை பொதுத்தேர்தலில் நம் கட்சியிடம் மற்றவர்கள் பேரம் பேசுவார்கள் அல்லது நம்மை அழைத்து அதிக சீட் கொடுப்பார்கள் அல்லது இரண்டு வருடம் கடுமையாக உழைத்தால் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் தலைவரே  என்று தூபம் போட்டு இருக்கிறார்கள் அடிபொடிகள். அதை நம்பிய அவர்கள் நாற்காலி கனவில் திளைத்து கொண்டு இருக்கிறார்களாம்... ஒரு கட்சிக்கு குழுவின் ஓட்டு கிடைத்து இருக்கிறது. இன்னொரு கட்சிக்கு முகத்தின் ஓட்டு கிடைத்து இருக்கிறது. இதை வைத்து எல்லாம் ஒன்றும் பண்ண  முடியாது. ஓட்டுக்களை பிரிக்கலாம். மற்றபடி ஜெயிக்க எல்லாம் முடியாது என்று அரசியல் நோக்கர்கள் பேசிக் கொள்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்