SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டில், பிட்காயின் போன்றதொரு கிரிப்டோகரன்சியை அறிமுகம்

2019-05-25@ 15:06:25

டெல்லி: ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டில், பிட்காயின் போன்றதொரு கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் வடிவில் பணம்செலுத்தும் இந்த புதிய முறையை குளோபல்காயின் என்ற பெயரில், சுமார் 12 நாடுகளில் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் செலாவணி முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளுடன் ஃபேஸ்புக் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக், சுவிட்சர்லாந்தில் லிப்ரா நெட்ஒர்க்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், கிரிப்டோகரன்சிக்கான அடிப்படைக் கட்டமைப்பான பிளாக்செயின் போன்ற முறைகளை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் கடந்த வாரத்திலேயே தகவல் வெளியானது. மேலும், பிற கிரிப்டோகரன்சிகளின் மதிப்பில் பெரும் ஏற்றஇறக்கங்கள் காணப்படும் நிலையில், அதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில், பெரும் ஊசலாட்டங்கள் இல்லாமல் சீரான மதிப்பை ஏற்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-09-2019

    இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-09-2019

    15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-09-2019

    14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indo_fire_poison1

    இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

  • TrainDerailCongo50

    காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்