SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜ் தாக்கரே பிரசாரம் செய்த அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் கூட்டணி தோல்வி

2019-05-24@ 03:30:28

மும்பை: பாஜ - சிவசேனா கூட்டணிக்கு எதிராக மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பிரசாரம் செய்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மண்ணைக் கவ்வியுள்ளது. மக்களவைத் தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சி போட்டியிடவில்லை. ஆனால், பாஜ மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ராஜ் தாக்கரே, பாஜ-சிவசேனா போட்டியிட்ட சில முக்கிய தொகுதிகளில் அந்த கூட்டணிக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்தி பிரசாரம் செய்தார்.

அவரது இந்த பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இது காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று கருதப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட தொகுதிகளில்தான் ராஜ் தாக்கரே பிரசாரம் செய்தார்.

ஆனால், ராஜ் தாக்கரே பிரசாரம் செய்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ராஜ் தாக்கரேயின் பொதுக்கூட்டங்களுக்கு கூடிய கூட்டம், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாறவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-11-2019

    12-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • americaship

    ஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வரும் அமெரிக்க கடற்படை

  • traincrashtelungana

    தெலுங்கானாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிக்கனல் கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!

  • humanfacefish

    மனித முகம் கொண்ட வினோத மீன்: சீனாவில் உள்ள ஒரு ஏரியில் கண்டுபிடிப்பு...வைரலாகும் புகைப்படங்கள்

  • berlinwall

    ஜெர்மனியை இரண்டாக பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட 30ம் ஆண்டு தினம்: இசை நிகழ்ச்சியுடன் அனுசரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்