SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் போன கட்சிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-05-24@ 01:22:57

‘‘தேர்தல் வரட்டும் ஒரு கை பார்க்கிறேன் என்று சொன்னவங்க எல்லாம் இந்த தேர்தல்ல காணாமல் போயிட்டாங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாடு தேர்தலை பொறுத்தவரை 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஆர்ப்பாட்டாக களம் இறங்கியவர் கிப்ட்காரர்... புரிந்தும் புரியாமலும் பேசி கட்சி ஆரம்பித்தவர் மூன்றாம் பிறை நடிகர்... வீரவசனம் பேசி கட்சியை நடத்திய இயக்குனரும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்... இவர்கள் எல்லோரும் தங்களை முன்னிறுத்தியே பிரசாரத்தில் ஈடுபட்டார்களே தவிர மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று பெரிய அளவில் பேசவும் இல்லை... கட்சிக்கான கட்டமைப்பு எதுவும் இல்லாமல் தேர்தலை சந்தித்தனர். மக்கள் இவர்களை ஏற்கவே இல்லை. குறிப்பாக நோட்டா, சுயேட்சைகள் போன்ற வேட்பாளர்களின் ஓட்டுகளை கூட்டினால் கூட இவர்களால் பெரும்பாலான தொகுதிகளில் அந்த எண்ணிக்கையை நெருங்க முடியவில்லை...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெபாசிட் காலியாச்சாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர நடிகர், இயக்குனர், திடீர் தலைவரான கிப்ட்காரர் போன்றவர்கள் நாடாளுமன்ற தேர்தல் நடந்த 38 இடங்களில் ஒன்றில் கூட டெபாசிட் வாங்கவில்லை என்பதில் இருந்தே... அவர்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு தெரிந்து இருக்கும்... அதிமுக உள்பட நாடாளுமன்ற தேர்தலில் பல கட்சிகள் தோல்விக்கு யாரும் எந்த காரணமும் சொல்ல முடியாது. தமிழக மக்கள் அவர்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டனர் என்பதே உண்மை...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மைக் அமைச்சர்... அடுக்குமொழியில் பேசும் தாமரை பெண்மணி எல்லாம் எங்கே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூத் கைப்பற்றுவோம் என்று கூறியவர் இருக்குமிடமே தெரியவில்லை. தாமரை கட்சி தலைவியும் தோற்றுவிட்டார். அதிமுகவில் சண்டை போட்டு தாமரை தலைமை மூலம் பஞ்சாயத்து செய்து சீட் ெபற்ற டாக்டரும் தோற்றுவிட்டார். சென்னையே கோட்டை தான் என்று மைக் பிடித்தால் மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் மைக் அமைச்சரை காணவே இல்லை. ஒட்டவைத்த பானையில் எவ்வளவு தான் தண்ணீர் ஊற்றினாலும் அதில் தண்ணீரும் தங்காது... பலமான கூட்டணி அமைத்தாலும் தொண்டர்களுக்குள் ஒற்றுமை இல்லையென்றால் ஜெயிக்காது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அது என்ன ஒற்றுமை...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி தலைமையிடம் சண்டை போட்டு 3 கட்சிகள் சீட்டு வாங்கியது. ஒரு கட்சி பஞ்சாயத்து பேசியது... இந்த கட்சிகளுக்கு சேலம்காரர் ரகசியமாக ஆப்பு வைத்த விஷயம் இப்போது வெளியாகி இருக்கு... இவர்களின் தொகுதியில் இலைக்கட்சிக்காரர்கள் யாரும் வேலையே பார்க்கலையாம்... ஆக்டிவாக இருந்த இலைக்கட்சிக்காரர்கள் இடைத்தேர்தல் நடக்கும் பகுதிக்கு சென்றுவிட்டார்கள்... ஊரில் இருந்த கூட்டணி கட்சியினரும் சொல்லி வைத்தபடி ஓட்டு போடவில்லையாம்... அதில் பொன்னாரும் தப்பவில்லை. அன்பும் தப்பவில்லை... இசையும் தப்பவில்லை. டாக்டரும் தப்பவில்லை... இது எல்லாம் சேலம்காரரின் வேலைதான் என்கிறார்கள்... தைலாபுரத்தில் விருந்து சாப்பிட்ட கையோடு எங்களையும் கை கழுவி விட்டுட்டாரே என்று புலம்பி தள்ளுகிறார்களாம் மாம்பழ தொண்டர்கள்... ஆனால் எதிர்கட்சிகளோ, அவர்களின் செல்வாக்கு செல்லாக்காசு ஆகிவிட்டது. இனி அவர்கள் ஜெயிக்கவே மாட்டார்கள்... பிரசார பீரங்கியாக இருந்த ‘காடு’ இறந்த பிறகு அந்த கட்சிக்கு இறங்கு முகம் வேகமாக போய்விட்டது, இதுவும் ஒரு காரணம்...’’ என்று சோகத்துடன் தோல்வியை பற்றி பேசிக் கொள்கிறார்கள் கட்சியினர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிப்ட் செய்து கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது... சுத்தமாக டெபாசிட் காலி.. ஒவ்வொரு சுற்றிலும் அரை செஞ்சுரி ஓட்டு வாங்கவே பாடாத பட்டுபோனார்.. அவரை உள்ளூர் கிப்ட் கட்சியினர் அழகாக கால் வாரிவிட்டனர்... இந்நிலையில் சிறைபறவைக்கு தான் பத்து சுற்றில் வாங்கிய வாக்குகளை தூது மூலம் கொடுத்து அனுப்பினாராம் புகழானவர்... அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறைப்பறவை கிப்ட்காரரை உடனே வரச்சொல்லி இருக்கிறாராம்... அநேகமாக இந்த சந்திப்பு விரைவில் நடக்கலாம் என்கிறார்கள்... அப்போது கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகச் சொல்லும் வாய்ப்பு இருக்கிறதாம். டெபாசிட் இழந்த முகத்தோடு எப்படி போவது என்று யோசிக்கிறாராம்... பில்டப் மேல் பில்டப் கொடுத்து தன்னை பெரிய மாநில தலைவராக காட்டிக் கொண்ட கிப்ட்... இப்போது அச்சத்தில் இருக்கிறாராம். ஆர்கேநகர் வெற்றியை வைத்துதான் கட்சியை உடைத்தேன்... எம்எல்ஏக்களை இழுத்தேன்... இனி என்னிடம் இருக்கும் கட்சி தொண்டர்கள் எந்த கட்சிக்கு செல்வார்களோ என்று புலம்ப ஆரம்பித்துள்ளதாக அவரின் அடிபொடிகள் வேதனையுடன் தெரிவித்தனர்... அதே சமயம் மன்னார்குடியில் ஒரு குடும்பம் வீட் எடு கொண்டாடு என்ற ரீதியில் கிப்டின் தோல்வியை சுவீட் கொடுத்து, கறி விருந்து வைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறாராம்... ஒரு எம்பி சீட்டும் பிடிக்க முடியல... ஒரு எம்எல்ஏ சீட்டும் பிடிக்க முடியல... ஆர்கேநகரை வைத்து இவர் போட்ட ஸ்கெட்ச் எல்லாம் செல்லா காசு ஆகிவிட்டது என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-08-2019

  25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்