SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்..!

2019-05-23@ 19:36:04

சென்னை: தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 351 இடங்களிலும், காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்றவை 102 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 38 மக்களவை தொகுதிகளில் திமுகவும், 1 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

22 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் தயாநிதி மாறன் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். வெற்றி பெற்ற தயாநிதி மாறன் 4,47,150 வாக்குகளும் தோல்வி அடைந்த பாமக வேட்பாளர் சாம்பால் 1,46,713 வாக்குகளும், பெற்றனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nevadaarea11

    அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

  • 20-09-2019

    20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்