SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்.பி-யான 5 எழுத்தாளர்கள்... திமுக சாதனை

2019-05-23@ 19:04:34

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஐந்து எழுத்தாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர். நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 339 இடங்களிலும், காங்கிரஸ் 88 இடங்களிலும், மற்றவை 105 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 38 மக்களவை தொகுதிகளில் திமுகவும், 1 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மதுரையிலும், தி.மு.க சார்பில் தூத்துக்குடியில் கனிமொழி வேட்பாளராக போட்டியிட்டார். அதேபோல், எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தி.மு.க வேட்பாளராக தென்சென்னையிலும், எழுத்தாளர் ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக விழுப்புரத்திலும், எழுத்தாளர் ஜோதிமணி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கரூரிலும் போட்டியிட்டார்கள்.  

தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையைக் காட்டிலும் தொடக்கம் முதலே கனிமொழி முன்னிலை வகித்து வருகிறார். மதுரையில் சு.வெங்கடேசன், தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், விழுப்புரத்தில் ரவிக்குமார், கரூரில் ஜோதிமணி என ஐந்து எழுத்தாளர்களும் முன்னிலை வகித்துவருகிறார்கள். தற்போது வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஐந்து எழுத்தாளர்களும் எம்.பி ஆகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்