SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் இன்னொரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை...!

2019-05-23@ 16:43:32

குமரி: தமிழகம் இன்னொரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. குமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், பி.ஜே.பி. வேட்பாளரான மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் லட்சுமணன் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குமரி தொகுதியில் 2 வாக்கு எந்திரங்களை திறக்க முடியாததால் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை விவரத்தை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. முதல் சுற்றிலேயே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து தொடர் முன்னிலையில் இருந்தார். 12 சுற்றுகள் முடிவில் வசந்தகுமார் 2 லட்சத்து 76 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 133 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 7333, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 4201, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் 5901 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் வெற்றி பெற உள்ளார். இருப்பினும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக உள்ள வசந்தகுமார், தற்போது கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக தேர்வாகிகறார். இதனால் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்