SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

'மக்களவை தேர்தலில் தோற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல': மம்தா பானர்ஜி ட்வீட்

2019-05-23@ 16:21:20

கொல்கத்தா: மக்களவை தொகுதியில் தோற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல என  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியமைக்க 472 தொகுதி தேவையுள்ள நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 342 தொகுதிகளில் முன்னிலையில் வகித்து வருகின்றனர். இது தவிர காங்கிரஸ் 94, திரிணாமுல் 22, மற்றவை 84 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. இந்த நிலையில், பெரும்பான்மை இடங்களை பெற்று பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதன்காரணமாக, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங், காந்திநகர் தொகுதியில் அமித்ஷா ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சி 108 இடங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தனது பதவியை இழந்தார். புதிய தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி வகிக்கவுள்ளார். இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக கிட்டத்தட்ட ஆளும் கட்சியை நெருங்கும் வகையில் இடங்களைப் பிடித்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 23 இடங்களிலும் பாஜக 17 இடங்களையும் பெற்றுள்ளது. இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில், “வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் ஆனால் தோல்வியடைந்தவர்கள் தோல்வியாளர்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். நாங்கள் முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பின் கருத்துகளை பகிர்ந்து கொள்வோம். விவிபாட் ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்கு எண்ணிக்கையும் முடிவடையட்டும்” என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangla_train_crash11

    வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

  • athibar_northkoreaa11

    14 ஆண்டுகளுக்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் காட்சித் தொகுப்பு

  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்