SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்மேற்கு பருவமழைக்கான சாதக சூழல் 2 அல்லது 3 தினங்களில் துவங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

2019-05-22@ 12:49:12

புதுடெல்லி: தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்குள் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதி வாரத்தில் துவங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான சாதக சூழலானது இந்த மாதம் 19, 20 தேதிகளில் தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சாதக சூழலிலும் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 தினங்களில் தெற்கு அந்தமான் கடற்பகுதியிலும், தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் தென்மேற்கு பருவமழைக்கான சாதக சூழல் ஏற்படும். அதன் பிறகு 10 நாட்கள் கழித்து அதாவது ஜூன் 6ம் தேதி தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையின் போது கேரள மாநிலத்தில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகமாக மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், மே 19, 20ம் தேதி சாதக புயல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சாதக சூழல் 3 தினங்கள் தாமதமாக ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அதேசமயத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்