SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்

2019-05-22@ 00:19:45

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சொகைல் முகமது தற்போது பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரை பாகிஸ்தான் வெளியுறவு செயலாளராக பணிமாற்றம் செய்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.  இதையடுத்து காலியாகும் இந்திய தூதர் பதவிக்கு தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றும் மொய்ன் உல்ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளுக்கும் 20க்கும் மேற்பட்ட புதிய அதிகாரிகளையும் இம்ரான்கான் நியமனம் செய்துள்ளார்.  காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதை தொடர்ந்து விரைவில் இந்தியாவில் புதிய அரசு பதவியேற்க உள்ளதையொட்டி, அந்த அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருப்பதால் தூதர் மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

  • bangladeshtrain

    வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

  • wildfireaus

    காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

  • hongkongprofire

    ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

  • chicagosnow

    பனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்