SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சத்தால் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை சொல்கிறார்: wiki யானந்தா

2019-05-22@ 00:18:57

‘‘தண்ணீர் பிரச்னை ஒரு அரசையே கவிழ்த்ததை சினிமாவில் பார்த்து இருக்கிறேன்... அது தமிழகத்தில் உண்மையாகி விடும் போலிருக்கே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘உண்மையில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அதை வைத்து ஒரு கும்பல் கொள்ளையடிக்க திட்டம் போட்டு அதை கச்சிதமாக காய் நகர்த்தி வருது.. குழாய் மூலம் தண்ணீர் வந்தால் கணக்கு இல்லை. ஆனால் லாரிகள் மூலம் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அது குடிநீரா, குளிக்கிற தண்ணீரா என்பது பற்றிய எந்த வழிகாட்டு நெறிமுறையும் இல்லை. பொதுமக்கள் தண்ணீர் கேட்டு போராடாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யச் செல்லி மேலிட உத்தரவாம். அதனால லாரிகளில் தண்ணீரை எடுத்துச் சென்று விநியோகம் செய்கிறார்கள். எத்தனை லாரி என்பது யாருக்கு தெரியும். ஆயிரம் லாரி தண்ணீரை சப்ளை செய்துவிட்டு 2 ஆயிரம் லாரிக்கு கணக்கு காண்பித்தால் அதை சம்பந்தப்பட்ட துறையினர் பில் செட்டில் செய்து தந்தே ஆக வேண்டும். அதில்தான் கூட்டுக் கொள்ளை நடக்கிறது. இதுவும் இன்னும் சில நாட்களுக்குதான், உள்ளூர் மக்களும் தங்கள் பகுதியில் தண்ணீர் எடுக்க கூடாது என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள். இது தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் சென்னை தண்ணி இல்லாத தீவாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குடும்ப தலைவிகளுக்கும் தலைவர்களுக்கும் இந்த தண்ணீர் பஞ்சம் பெரிய சுமையை ெகாடுத்துள்ளது போல இருக்கே...’’ என்றார் பீட்டர். ‘‘ம் நானும் கேள்விப்பட்டேன். கேன் குடிநீர் கேட்டு ஆர்டர் கொடுத்தால் 2 அல்லது மூன்று நாள் கழித்துதான் கொண்டு வந்து தருகின்றனர். இப்போது தண்ணீர் பஞ்சத்தை பயன்படுத்தி ஒரு கேனுக்கு ரூ.5 வரை விலையை ஏற்றிவிட்டனர். இஷ்டம் இருந்தால் வாங்குங்க... இல்லையென்றால் போங்க என்பதுதான் வியாபாரிகளின் எண்ணமாக மாறிவிட்டது. அப்புறம் ஓட்டல்களில் கூட ஒரு டம்ளர் தண்ணீர் வைக்கிறார்கள். அப்புறம் கேட்டால்தான் வந்து தருகிறார்கள். அப்புறம் இரண்டாவது கிளாசுக்கு ஒரு ரூபாய் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அப்புறம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மருத்துவமனைகளில் கூட தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... எனவே அங்கேயும் ரயில் நீர், அம்மா குடிநீரை காசு கொடுத்து வாங்கி தான் குடிக்கணும்... இலவச தண்ணீர் குழாயில் வருவதே இல்லை...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூத்துக்குடி சம்பவத்தின் முதல் ஆண்டில் தமிழக அரசு பாராமுகமாக இருப்பது ஏனோ...’’. ‘‘தூத்துக்குடி விஷயத்தில் தலைவர்கள் எல்லோரும் கண்டனம் தெரிவித்து கொண்டிருக்க.. ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜாலியாக விருந்தில் பங்கேற்க சென்றது தமிழக மக்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாம்... அதற்கான பலனை ஆளுங்கட்சி கூட்டணி விரைவில் அனுபவிக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பார்த்தீங்களா ஒவ்வொரு நாளும் ஒரு கருத்துக்கணிப்பு முடிவு வருது...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதைவிடு, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவ்வளவு சீக்கிரத்தில் கருத்து தெரிவிக்க மாட்டார். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறி போய் உள்ளது. கிரிக்கெட்டில் பால் டேம்பரிங்க் பண்ற மாதிரி... வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை அப்படியே ஒரு கட்சிக்கு மாற்றும் வகையில் டேம்பர் செய்ய அதிநவீன தொழில் நுட்பத்தை தாமரை தரப்பு பண்ணப்போறதா ஒரு தகவல் செவிவழியே ஓடுது... அது உண்மையா என்பதை எதிர்கட்சிகள்தான் கண்டுபிடிக்க வேண்டும். அப்புறம் தன் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு பதிவு இயந்திரத்தையே மாற்றுவது, வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குகளை அதிகாரிகளை வைத்தே மாற்றுவது என்று பல வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை மாற்றும் முயற்சி நடப்பதாக இன்ஜினியர்களே சொல்கின்றனர். அதை தாமரை தரப்பு மறுக்கிறது. ஆனால் பிரணாப் முகர்ஜி திடீரென அறிக்கை விடுத்ததை பார்க்கும்போது தாமரை எதையோ மறைக்கிறது... தில்லுமுல்லு செய்துள்ளது என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை என்றார் விக்கியானந்தா.

‘‘கோயம்பேடுகாரர் பிரசாரத்துக்கே வரல... ஆனால் மத்திய அமைச்சர் பதவி மேலே வந்த ஆசையை பார்த்தியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் இருந்து விருந்துக்கு கிளம்பியவர்களில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இரண்டு விஷயத்துக்காக போய் இருக்காங்க... ஒன்று மத்தியில் தாமரை வந்தால் அமைச்சர் பதவி கேட்டு ஒரு பைல் எடுத்துட்டு போய் இருக்காங்க... இன்னொரு பைல் உள்ளாட்சி தொடர்பானது, இதுவும் தாமரை ஆட்சிக்கு வந்தால் இந்த கூட்டணி தொடர்வது பற்றியும் கிடைக்க வேண்டிய இடங்கள் பற்றியும்... அதில் தாமரை பஞ்சாயத்து செய்து வாங்கித் தர வேண்டும் என்பது பற்றியும் இருக்கிறதாம்...’’ என்று இழுத்தார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் முடிவே வராத நிலையில் விருந்து தேவைதானா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதிகமான தன்னம்பிக்கையும் கர்வமும் ஒருவரை மதி மயங்க செய்யும், தாமரை விஷயத்தில் இதுதான் நடந்து வருகிறது. இந்த விருந்தில் பங்கேற்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விருந்து கொடுப்பதோடு தாமரை தலைவர் ஒரு முக்கியமான உறுதி மொழியும் கொடுக்க உள்ளாராம்... அதனால விருந்துக்கு தலைவர்கள் பல வண்ண கனவுடன் சென்று இருக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்