SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பான வழக்கு: கால அவகாசம் கோரி ட்விட்டர் நிறுவனம் ஐகோர்ட்டில் மனு

2019-05-21@ 15:30:23

சென்னை: இணையதள குற்றங்கள் தடுப்பது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்த கால அவகாசம் வழங்க கோரி ட்விட்டர் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டது. மேலும், இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் மே 20ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு ஓதி வைத்தது. இந்நிலையில், தங்கள் நிறுவன பிரதிநிதி, தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்த கால அவகாசம் வழங்க கோரி ட்விட்டர் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புது மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில், இந்த ஆலோசனையில் பங்கேற்க தகுதியான நபராக சைன்யா ராமச்சந்திரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வேறு சில பணிகள் இருப்பதால் ஜூன் முதல் வாரம் தலைமைச் செயலரை சந்தித்து ஆலோசனை நடத்தும் வகையில் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கப்பூர்வமான முடிவை எட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், எந்த ஒரு இழுத்தடிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட முயற்சிக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை அல்லது நாளை மறுநாள் ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்