SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திட்டமிட்டு இலையின் ஓட்டுக்களை சிதறடித்த கிப்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-05-21@ 01:46:23

‘‘என்ன பீட்டர் கிப்ட் ரொம்பவே அப்செட் போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘என்ன பண்றது... 50 ‘சி’க்கு மேலே செலவு செய்தும் இடைத்தேர்தல், நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஒரு சீட் கூட வெல்லும் இல்லை என்ற தகவலால் அதிர்ச்சியில் உள்ளாராம். அதே சமயம் சிறைப்பறவை சொன்னபடி துரோகி ெஜயித்துவிடக் கூடாது என்ற உத்தரவை நிறைவேற்றி உள்ளாராம்... இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்காவிட்டாலும் இலைக்கு ஓட்டுகள் போகாமல் சிக்ஸர், பவுண்டரிகளாக சிதறடித்துள்ளாராம். இந்த தகவலை தனக்கு வேண்டியவர்கள் மூலம் கேட்ட சிறைப்பறவை சந்தோஷப்பட்டாராம்... இருந்தாலும் கிப்ட் தரப்பிலும் 30 சதவீதத்துக்கும் மேலாக பணத்தை சுருட்டிவிட்டார்களாம்... அதுவும் ஓட்டு மாறியதற்கு காரணம் என்ற பேச்சு கிப்ட் கட்சியின் தொண்டர்கள் பேசிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஜெ. தீபா என்ன ஆனார்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஹாட் டாபிக் பற்றி கேளுங்கனு சொன்னா... ஆட்டத்திலேயே இல்லாதவங்களை பற்றி கேட்கிறீங்களே... இலைக் கட்சிக்கு ஆதரவு என்று சொன்னார். அதற்கு பிறகு எங்கே போனார்.. என்ன ஆனார் என்ற தகவலை விசாரிச்சா... தேர்தல் பிரசாரத்தை டிவியில் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்ததாக பேச்சு ஓடுது... ஆதரவு என்று சொல்லிவிட்டு மருந்துக்கு ஒரு தடவை கூட பிரச்சாரத்துக்கு போகவே இல்லையாம். அவர் வராததை இலை கட்சியும் கண்டுகொள்ளவில்லையாம். அவர் வந்து பிரசாரம் செய்தால் வரும் ஓட்டுகளும் வராது என்ற இலை கட்சியின் நினைப்புதான் இதற்கு காரணமாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எஸ்ஐ பயிற்சியே வேண்டாம்னு எழுதி கொடுத்த காக்கிகள் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழக காவல்துறையில் எஸ்ஐ பயிற்சிக்கு தகுதியான, விருப்பமுள்ள எஸ்எஸ்ஐகள் மனு கொடுக்கலாம் என்று காவல்துறை சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்திலும் எஸ்ஐ பயிற்சிக்கு செல்வோரின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்எஸ்ஐக்கள் ஒருவர் கூட எஸ்ஐ பயிற்சிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லையாம். மாறாக அனைவரும் அன்வில்லிங் எழுதி கொடுத்து விட்டார்களாம்.

அதற்கு அவர்கள் கூறும் காரணம், எஸ்எஸ்ஐக்களாக இருந்து, எஸ்ஐக்களாக பதவி உயர்வு பெற்றாலும் அதே சம்பளம் தான் கிடைக்கும்... பயிற்சி முடித்து, எஸ்ஐ பொறுப்பேற்றால், ஒட்டுமொத்த பணியையும் எங்கள் தலையில் கட்டிவிடுவார்கள். புதிதாக தேர்வு செய்யப்படும் எஸ்ஐக்களை எந்த வேலையும் வாங்குவதில்லை. இதனாலேயே நாங்கள் எஸ்ஐ பயிற்சிக்கு அன்வில்லிங் எழுதிக்கொடுத்துள்ளோம் என்கிறார்களாம். தற்போது வேலூர் மாவட்ட காவல் துறையில் இந்த அன்வில்லிங் கதைதான் பரபரப்பாக பேசப்படுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘குன்றம் இடைத் தேர்தலில் ‘சர்க்கார் பட சம்பவம் போல நடந்த விஷயம் தெரியுமா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடந்த 19ம் தேதி நடந்த திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நடந்துச்சு... தொகுதிக்கு உட்பட்ட கூத்தியார்குண்டு 138வது வாக்குச்சாவடிக்கு, அதே ஊரைச் சேர்ந்த சின்ன அழகு ஓட்டுப்போடப் போயிருக்காரு... அங்கிருந்தவர்களோ, ‘‘ஏற்கனவே உங்களுக்கு ஓட்டுப்போட்டாச்சு’’ எனக்கூறி திருப்பி விட்டிருக்காங்க... டென்ஷனான சின்ன அழகு, ‘‘நான் எதிர்க்கட்சிக்காரன்... என் ஓட்டை எப்படியும் நான் போட்டே ஆகணும்.. ஆளுங்கட்சிக்கான மொத்த கவுண்டிங்ல ஒரு ஓட்டு எண்ணிக்கையைக் குறைக்கணும்... அதுக்குப்பதிலா என்னை ஓட்டுப்போட அனுமதிக்கணும்’’ என்று போராட்டத்தில் இறங்கிட்டாராம்... மேலும், தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியான தாசில்தாருக்கு போன் போட்டு, ‘ஓட்டுப்போட அனுமதிக்காவிட்டால், மீடியாக்காரர்களை அழைத்து வந்து போராடுவேன்’’ என்றாராம்... தாசில்தாரோ கூலாக, ‘‘இரண்டு ரூபாய் கட்டிடுங்க... ஒரு வாக்குச்சீட்டுத் தரச் சொல்றேன்.

அதுல நீங்க சேலஞ்ச் ஒட்டுப்போடலாம்’’ என கூறினாராம். தொடர்ந்து போன் இணைப்பைத் துண்டிக்காத அந்த அதிகாரி, ‘‘ஒருத்தரு ஓட்டுப்போடலையாம். சேலஞ்ச் ஓட்டுப்போடுயான்னு சொன்னா, மிரட்டுறான் மனுஷன்.. இந்தாளு போடுற ஓட்டை வாங்கி ஓரமாத்தானே வைக்கப்போறோம்... வாக்குப்பதிவு ஓட்டைத்தானே எண்ணுவோம்...’’ என்று கிண்டலாக பேசினாராம்... இந்த பேச்சை கால் ரெக்கார்டிங் பதிவாக வைத்திருக்கிற சின்ன அழகு, ‘‘ஓட்டுகள் எண்ணுற 23ம் தேதி என்னோட ஓட்டு எண்ணப்பட்டதான்னு நியாயம் கேட்பேன்... அதைப்போல, எதிர்தரப்புல ஒரு ஓட்டைக் குறைச்சுட்டு, என் ஓட்டை எண்ணணும்னு கேட்டு போராட்டம் நடத்தாம, நான் விடப்போறதில்லை’’ என்றபடி சொல்லி வருகிறாராம்... ’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

‘‘அப்புறம் டெல்லிக்கு சில பைல்களோட செல்லும் இலைக் கட்சியின் விவிஐபிக்களை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பு சேலமும் தேனியும் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஒரு பைலை எடுத்துட்டு போய் இருக்காங்களாம். அங்க கொடுக்கும் விருந்தில் பங்கேற்க போறாங்களாம்... கூட்டணி இல்லாவிட்டால் மத்தியில் தாமரை மலர்வது சந்தேகம் தான் என்கிற நிலைதான் காணப்படுகிறது. எனவே கூட்டணி தலைவர்களை அழைத்து நன்றி சொல்லும் சாக்கில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதித்துவம் தரப்படும் என்று சொல்ல இருக்கிறாராம். ஆனால் உண்மை நிலைமையோ வேறு மாதிரி இருக்கு...

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தயார் என்று சொல்லி இருக்காம்... குறிப்பாக மாநிலத்தில் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்ட கட்சிகள் கூட பிரச்னையை மறந்து தாமரை மலரக்கூடாது என்ற ஒற்றைக் கொள்கையில் ஒன்று சேரும் வாய்ப்பு இருக்காம்... அதற்கான பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டதாம்... 23ம் தேதி தேர்தல் முடிவு வெளியாக தொடங்கும்போது காங்கிரஸ் தரப்பில் யார் யார் உறுதியாக இருப்பார்கள் என்பது முடிவாகி விடும் என்று டெல்லி விவிஐபிக்கள் சொல்கிறார்கள் என்றார்...’’ என்றார் விக்கியானந்தா. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ilavarsar_pakisthn111

  பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

 • kavan_manavai11

  அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

 • seuol_expooo1

  தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

 • pumbkin_comp111

  அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

 • bday_day11

  ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்