SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோட்சே தொடர்பாக பேசுவதற்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் பெரியார் திக தாக்கல்

2019-05-21@ 00:30:05

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியார் திகவைச் சேர்ந்த வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, நாதுராம் வினாயக் கோட்சே தொடர்பாக மக்களுக்கு எடுத்துச்சொல்ல ‘‘காந்தியை கொலை செய்த நாதுராம் வினாயக் கோட்சே ஒரு இந்து அடிப்படைவாதி’’ என்ற பெயரில் மயிலை மாங்கொல்லையில் வரும் 26ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இந்த கூட்டத்திற்கு அனுதி கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 14ம் தேதி மனு கொடுத்தோம். எங்களது மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்