SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி அருகே விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

2019-05-20@ 01:07:30

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராமத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு வழங்குவதற்காக ஐஓசி மூலம் இயந்திரங்களை கொண்டு குழாய் பதிக்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட விவசாய நிலங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கும், விவசாய சங்கத்தினருக்கும் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி குழாய் பதிக்க ஆயத்த பணி நடந்தது. தகவலறிந்ததும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் குலையன்கரிசல் விவசாயிகள் திரண்டு வந்து பொக்ைலன் இயந்திரங்களை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேர வாக்குவாதத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட இயந்திரங்கள், வாகனங்களை விவசாயிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க சம்மதிக்க மாட்டோம். சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு மாற்று வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் தமிழக அரசும் பாராமுகமாக உள்ளது. தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கும் இது போன்ற திட்டங்களை அரசு நிறுத்த வேண்டும். அல்லது மாற்றுப்பாதை வழியாக எரிவாயு குழாய் பதிக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்