SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமிகளை ஆபாசமாக படம்பிடித்த வழக்கு: சென்னை மருத்துவ பிரதிநிதிக்கு வழங்கிய ஜாமீன் அதிரடி ரத்து

2019-05-20@ 01:05:35

மதுரை: சிறுமிகளை ஆபாசமாக படம் பிடித்ததாக போக்சோவில் கைதான சென்னை மருத்துவ பிரதிநிதிக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. தூத்துக்குடியை சேர்ந்தவர் அமரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது உறவினர் சென்னையில் மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவர் மகள் உறவு முறையுள்ள அமரனின் 17 மற்றும் 14 வயது மகள்களை அரை நிர்வாண போட்டோ எடுத்து, அதை அவர்களுக்கே வாட்ஸ் அப்பில் அனுப்பி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அமரன் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து மருத்துவ பிரதிநிதியை கைது செய்தனர். இவருக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் 2.3.2019ல் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமரன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.


மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘‘இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட மைனர் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் குடும்பத்தின் ஏழ்மையை பயன்படுத்தி சிறுமிகளுக்கு பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுத்து அரைநிர்வாணமாக படம் பிடித்து பாலியல் ரீதியாக மருத்துவ பிரதிநிதி தொந்தரவு அளித்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கும் போது நீதித்துறை மனதுடன் நீதிபதி செயல்படவில்லை. அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தபோது, கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தால் தகுதி அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை கீழமை நீதிபதி தவறாக புரிந்து கொண்டுள்ளார். இதனால் அவருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவர் உடனடியாக சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்