SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்னலுக்காக ரயில் நிற்கும் இடங்களை கண்டறிந்து தண்டவாளம் அருகில் கூடாரம் அமைத்து இரவில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்: கைதான மகாராஷ்டிரா ரயில் கொள்ளையர் பற்றி திடுக் தகவல்

2019-05-20@ 01:04:25

சேலம்: சிக்னலுக்காக ரயில் நிற்கும் இடங்களை கண்டறிந்து, அதன் அருகே கூடாரம் அமைத்து தங்கி இரவில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைதான மகாராஷ்டிரா கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவெலிப்பாளையம் பகுதியில் ரயில்வே பாலப்பணி நடக்கிறது. இதனால், அந்த வழியே இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் 20 கி.மீ., வேகத்தில் மெதுவாக இயக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி கடந்த 4, 5ம் தேதிகளில் அடுத்தடுத்து 6 ரயில்களில் 13 பெண்களிடம் இருந்து 37 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இச்சம்பவம், மாநிலம் முழுவதும் ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்களின் முதற்கட்ட விசாரணையில், இந்த நகை பறிப்பில் வட மாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க  மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.


இதனிடையே நகைப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை கர்நாடக மாநிலம் மங்களூரில் ரயில்வே போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களை ஈரோடு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த பாலாஜி சங்கர் சிண்டே (50), தானாஜி மன்மத் சிண்டே (20), சுனில் மன்மத் சிண்டே (22), பப்பு ஈஸ்வர் (25) எனத்தெரியவந்தது. இவர்களுடன் மேலும் 4 பேர், இக்கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிந்தது. இக்கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது எப்படி என போலீஸ் தரப்பில் கூறியதாவது: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பிச்சை எடுப்பது போல் வந்து, ரயில்வே தண்டவாள பகுதியை ஒட்டி கூடாரம் அமைத்து தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குடும்பத்துடன் வந்து, ரயில்கள் சிக்னலுக்காக நிற்கும் இடங்கள் மற்றும் ஸ்டேஷன் அருகே மெதுவாக செல்லும் இடங்களில் அந்த கூடாரத்தை ஏற்படுத்தி பதுங்கி இருந்து, இரவில் ரயில்களில் ஏறி பெண்களிடம் நகையை பறித்துள்ளனர்.

இந்த கும்பல், சங்ககிரி மற்றும் வேலூர் காட்பாடி, அரக்கோணம் பகுதியில் கைவரிசை காட்டியுள்ளது. ஒருமுறை கொள்ளையடிக்க குடும்பத்துடன் வந்தால், 100 பவுனுக்கு குறையாமல் கொள்ளையடித்துவிட்டு சொந்த ஊருக்கு தப்பிச் செல்வார்கள். பின்னர், நகையை மும்பை, டெல்லிக்கு கொண்டு சென்று விற்றுவிட்டு, சொத்துக்களை வாங்கிக்கொள்வார்கள். தற்போது கைதான 4 பேரிடம் இருந்து 53 பவுன் நகைகளை மீட்டுள்ளோம். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அக்கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் ஈரோடு ரயில்வே போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அழைத்துச் சென்று, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களின் மூலம், ஏற்கனவே தமிழகத்தில் கைவரிசை காட்டி, பதுக்கி வைத்துள்ள நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்