SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையை நோக்கி படையெடுக்கும் இலை கட்சி முக்கிய தலைவர்களின் எண்ணத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-05-20@ 00:56:32

‘‘தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்டி நடந்து முடிந்து இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்துள்ளது. மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்துள்ளனர். நான்கு தொகுதிகளிலும் ஆளுங்கட்சிக்கு பெரிய போராட்டமாகவே இருக்கும். தேர்தல் முடிவுகள் கூட பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்பதை வாக்கு பதிவு நிலவரமே காட்டுகிறது. ஆளுங்கட்சியினர் கலக்கத்தில் இருக்காங்க. எல்லோரும் ரிசல்டை எதிர்பார்த்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்...’’என்றார் விக்கியானந்தா. ‘‘சென்னைக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள்...’’

‘‘சபாநாயகர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, தேர்தல் முடிவு சாதகமாக வந்தால் என்ன செய்வது... பாதகமாக வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது... எதிர்கட்சிகளை எப்படி சமாளிப்பது... 22 சட்டபேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் எந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றியெல்லாம் ஆலோசிக்கப் போறாங்களாம். ரிசல்ட் வேறுவிதமாக வந்தால் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை... சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் நடவடிக்கை என்ற பல்வேறு கட்டங்களையும் பேச உள்ளார்களாம். எனவே 23ம் தேதி வரை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு இருக்கும்..’’ என்றார் விக்கியானந்தா.


‘‘பூத் கமிட்டியினரின் கேள்விகளை கேட்டு ஆடிப்போன அமைச்சர் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற எலக்‌ஷன் ரிசல்ட் வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உளவுத்துறை ரிப்போர்ட், ஆளுங்கட்சியை சேர்ந்த சில அமைச்சர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாம். இவர்கள் அனைவரும் தும்பை விட்டு, வாலை பிடித்த கதையாக இப்போதுதான், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த ஆரம்பிச்சிருக்காங்களாம். இப்படி ராசிபுரத்தை சேர்ந்த அமைச்சர் நடத்திய, ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்து நின்றாராம்.

நாமக்கல் பார்லிமென்ட்டுக்கு கட்சி அவரைத்தான் தேர்தல் பொறுப்பாளரா போட்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு வந்த உளவுத்துறை அறிக்கையை பார்த்து அமைச்சர் ஆடிப்போயிட்டாராம். இதற்கு தனது சொந்த தொகுதிக்கு உட்பட்ட நகரப்பகுதியில் ஆளுங்கட்சிக்கு கிடைக்கப்போகும் ஓட்டுகளின் எண்ணிக்கை குறித்த தகவலே காரணமாம். அப்புறமென்ன, தொகுதிக்குட்பட்ட ஒன்றிய நகர, பேரூர் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என்று அனைவரையும் அழைத்து பேசியுள்ளார். அப்போது பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ‘‘எலக்‌ஷன் வந்தா மட்டும் தான், எங்களை உங்களுக்கு தெரிகிறது.

மற்ற நேரங்களில் சென்னையிலிருந்து நீங்கள் வருவது கான்டிராக்டர் ஒருவருக்காக மட்டும்தான். இப்படி அடிமட்டத்தில் எந்த தொடர்பும் இல்லாமல்தான் உங்களின் செயல்பாடுகள் இருக்கிறது. அப்புறம் எப்படி அதிக வாக்குகள் வாங்க முடியும் என்று வெடித்து தள்ளிவிட்டார்களாம். தேர்தல் நேரத்தில்,என்னிடமே பணம் கேட்கிறீர்களா என்று அதட்டிய இந்த அமைச்சர், பூத் கமிட்டிகள் சீறியதில் கப்சிப் ஆகிவிட்டாராம். இது ஒருபுறமிருக்க, மாவட்ட செயலாளர் மற்றும், நிர்வாகிகளிடத்தில் தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளவே அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தினார் என்றும் கொளுத்திப்போட்டுள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்போ தொங்கலில் ராசிபுரம் பகுதி என்று சொல்லுங்க... அப்புறம் வேலூர்ல என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் தடைசெய்யப்பட்ட செல்போன் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதாம். இதனால் வெளியே இருப்பதைவிட சிறையில் அனைத்து வசதிகளுடன் கைதிகள் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்களாம். இந்த நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் ஆசாமியான மும்பை வாலாவிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையில் வாலாஜா கிளை சிறையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை கைதிகளுக்கு சப்ளை செய்ததாக கடந்த ஆண்டில் வேலூர் சிறைக்கு வினோதமானவர் மாற்றப்பட்டார். இதையடுத்துதான் வேலூர் சிறையில் கஞ்சா, செல்போன் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிறைக்குள்ளேயே கிசுகிசுக்கப்படுகிறது.’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பணம் பதுக்கல் விவகாரத்துல முட்டல் மோதல் ஏற்பட்டு இருக்காமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்ல அதிமுகவும், அமமுகவும் போட்டி போட்டு பணப்பட்டுவாடா செஞ்சு முடிச்சிட்டாங்களாம்... இலை தரப்புல ஒரு ஓட்டுக்கு ₹1,500 கொடுத்திருக்காங்களாம்... கிப்ட் தரப்பு முதல் ரவுண்ட்ல ஆயிரம்தான் கொடுத்தாங்களாம்... அப்புறம் அடுத்ததாக ₹500ஐ சேர்த்து தந்திருக்காங்களாம்... தேர்தலுக்கு முந்தைய நாள் இரவுக்குள் பணப்பட்டுவாடாவை முடிக்க சொல்லி அதிமுக தலைமையிடம் இருந்து உத்தரவாம்.. ஆனால், 50 வீடுகள் இருந்தால் 30 வீடுகள் என்ற கணக்குல மட்டும் பட்டுவாடா செஞ்சிருக்காங்க... மத்ததை இலை தரப்பு பதுக்கிட்டாங்க.

பணம் கிடைக்காதவர்கள் அதிமுக முக்கிய நிர்வாகிகள்கிட்ட கேட்டபோதுதான், மேட்டர் வெளியே தெரிஞ்சிருக்கு... ‘கிப்ட் கரெக்டா கொடுத்திருக்காங்க... நீங்க மட்டும் இப்படி பண்ணா எப்படி’ என பட்டுவாடா நிர்வாகிகளுக்கு செம டோஸ் விழுந்ததாம்.... ஏற்கனவே மதுரை, தேனி மக்களவைத் தொகுதிகளில் பணப்பட்டுவாடா சரியாக நடக்கலைன்னு புகார் கிளம்பிச்சு... இதனால வெளியூர் இலை தரப்பினரை ரவுண்டு விட்டு இந்த மேட்டரை தலைமை கண்டுபிடிச்சுதாம்... கட்சி நிர்வாகிகளும் பணத்தை சுருட்டிய விவகாரம் அதிமுக தலைமைக்கு எரிச்சலை உண்டாக்கி இருக்கிறதாம்... ஹாட்ரிக் வெற்றியை பெற முடியாதோ என்ற சோகத்தில் இலை தரப்பு  உலா வேதனையில் இருக்காம்...’’ என்று முடித்தார் விக்கியானந்தா.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்