SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்ட்ரல், அரக்கோணம், வேளச்சேரி இடையே 120க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து

2019-05-20@ 00:25:52

* வீட்டில் முடங்கிய மக்கள்

* வெயிலில் வாடிய பயணிகள்

சென்னை: சென்ட்ரல்-அரக்கோணம், கடற்கரை-வேளச்சேரி இடையே நேற்று 120க்கும் மேற்ப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்ட்ரல்-அரக்கோணம், கடற்கரை- வேளச்சேரி இடையே 120க்கும் மேற்பட்ட மின்சாார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளை விட ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு மற்றும் எளிதான போக்குவரத்து என்பதால் மக்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைந்து செல்கின்றனர். குறிப்பாக ஐடி ஊழியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், தனியார் கம்பெனிகள், கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் என பலரும் மின்சார ரயில்களையே பெரும்பாலும் நம்பி உள்ளனர். குறிப்பாக சென்னையில் பஸ்சுக்கு அடுத்து ரயில்சேவைகளை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். புறநகர் பகுதிகள் மட்டுமல்லாது வேலூர் மாவட்டம் அரக்கோணம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, காஞ்சிபுரம் மாவட்டம் திருமால்பூர் என்று மாவட்டங்களை கடந்து மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். காரணம் கட்டணம் மிகமிக குறைவு என்பதுதான்.

இந்நிலையில் நேற்று சென்ட்ரல்- அரக்கோணம், கடற்கரை- வேளச்சேரி இடையே வழக்கம் போல் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ரயில்வே நிர்வாகம் சார்பில் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தாலும் அது பயணிகளிடம் முறையாக சென்று சேராததால் பயணிகள் ரயில்நிலையம் வந்து திரும்பினர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடற்கரை, தியேட்டர், பார்க் போன்ற இடங்களுக்கு செல்ல முடிவு செய்தவர்கள் கூட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது குறித்து ரயில் பயணி ஒருவர் கூறுகையில்: ஒவ்வொரு வாரமும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டாலும் அந்த அறிவிப்புகள் முறையாக பொதுமக்களுக்கு சென்று சேராததால் வழக்கம் போல் ரயில் நிலையங்களுக்கு வந்த பிறகு தான் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விவரம் தெரிந்தது. எனவே ரயில்வே நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் குறித்து அறிவிப்பை பயணிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் ரயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகளில் எந்தெந்த மார்க்கமாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகளில் ஒட்டினால் நன்றாக இருக்கும்.

ஆனால் முக்கியமான ரயில்நிலையங்கள் தவிர மற்ற ரயில்நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் இல்லாததால் ரயில்நிலையங்களில் உள்ள சுவர்களில் ரயில்கள் ரத்து ெசய்யப்படும் என்று ஜெராக்ஸ் எடுத்து ஒட்டி விடுகின்றனர். ஏற்கனவே ரயில் நிலையங்களில் தேவையில்லாத நோட்டீஸ்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருப்பதால் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படும் அறிவிப்புகள் தான் ஒட்டப்பட்டிருக்கிறது என்று தெரியாமல் ஏதோ தேவையில்லாத நோட்டீஸ் தான் ஒட்டியிருக்கிறது என்று கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். அதன்பிறகு வழக்கம் போல் மறுநாள் ரயில் நிலையத்திற்கு வந்தால் ரயில் இல்லை என்று கூறுகின்றனர். எனவே ரயில்கள் ரத்து செய்யப்பட்டால் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். குறிப்பாக பார்க்டவுனில் ரயில் சேவை ரத்து செய்தது தெரியாமல் ஏராளமானவர்கள் கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அதை பயன்படுத்தி ஆட்ேடாக்காரர்கள் 100 முதல் 300 வரை கட்டணம் வசூலித்தனர்.

இதைப்போன்று அனைத்து ரயில்கள் ரத்து செய்யப்படும் கூட ஏதோ வெள்ளைத்தாளில் ஜெராக்ஸ் எடுத்து அதை ரயில் நிலையங்களில் உள்ள சுவர்களில் எங்கையாவது ஒட்டிவிட்டுச் செல்கின்றனர். ஆனால் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்படும் போது எந்த ரயில்கள் ரத்தாகிறது என்று அறிவிப்பு பலகைகளில் ஒட்டுவதில்லை. எனவே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டால் அதை ரயில் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் அறிவிப்பு பலகைகள் வைத்து ரத்து செய்யப்படும் ரயில்கள் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

எக்ஸ்பிரஸ் தடத்தை பயன்படுத்தலாம்

ஒவ்வொரு வாரம் பராமரிப்பு பணிகள் என்று கூறி அனைத்து ரயில்களும் ரத்து செய்கின்றனர். அதற்கு பதில் மின்சார ரயில் வழித்தடளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக இருந்தால் எக்ஸ்பிரஸ் வழித்தடளத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கினால் கூட வெகு தூரத்திற்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். மாறாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதால் வேறுவழியின்றி பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கூடுதல் நேரம் மற்றும் பணம் தான் அதிகம் செலவாகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்