SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மம்தா வீட்டில் குவியும் போஸ்ட் கார்டு: போலீசை கிண்டலடித்து வீடியோக்கள் வைரல்

2019-05-19@ 21:34:19

கொல்கத்தா: மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா வீட்டிற்கு, அவருக்கு எதிராக ஏராளமான போஸ்ட் கார்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும், அம்மாநில போலீசை கிண்டலடித்து வீடியோக்கள் வைரலாகி வருகிறது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜ தேசிய தலைவர் அமித் ஷா தேர்தல் பிரசார பேரணி மேற்கொண்ட போது, பாஜ - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கிடைேய வன்முறை ஏற்பட்டது. அதனால்,  நிர்ணயக்கப்பட்ட நாளுக்கு ஒருநாளுக்கு முன்னதாக தேர்தல் பிரசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. உத்தரபிரதேசம் பாஜவுக்கு கைகொடுக்காத நிலையில் ேமற்குவங்கத்தில் அக்கட்சி அதிக கவனம் செலுத்தி உள்ளது. அதனால், அங்கு அதிக  சீட்டுகளை கைப்பற்ற மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு நிர்வாகத்தை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு, ஏராளமானோர் தபால் அட்டைகளில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்தை எழுதி மம்தா பானர்ஜியின் வீட்டு முகவரிக்கு கடிதங்களை அனுப்பி  வருகின்றனர். இதை ஒரு இயக்கமாகவே பலரும் நடத்தி வருகின்றனர். இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மம்தா பானர்ஜியின் தூக்கத்தை தட்டி எழுப்புவதற்காக ‘ஜெய் ராம்’ என்ற வாசகத்துடன் தபால்  அட்டைகள் அவரது முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் முழங்கியதற்காக பாஜவினர் சிலரை சமீபத்தில் போலீசார் கைது செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அதேபோன்று ‘ஜெய் ராம்’ என்று முழங்கியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்  பல இடங்களில் பாஜவினரை அடித்து துவைத்தனர்.

இதுகுறித்த வீடியோ பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னாலே காவல்துறையினர் அவர்களை கைது செய்து உள்ளே  இழுத்துச் சென்று விடுவார்கள் என்ற கருத்துடன் பல்வேறு கிண்டல்கள் மம்தா பானர்ஜிக்கு எதிராக மீம்ஸ்களாக உலா வருகின்றன.  அதில், ‘காவல் துறையினரை அழைக்க வேண்டுமா? 100 என்ற எண்ணுக்கு போன் செய்தால் மற்ற மாநிலங்களில், அந்த எண்ணானது செல்லுபடியாகும். ஆனால் மேற்கு வங்கத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று மெசேஜ் அனுப்பினாலே போதும்  காவல்துறையினர் உங்கள் வீடு தேடி வந்து உங்களை அழைத்து செல்வார்கள்’ என்று கேலி செய்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இதில், மம்தாவுக்கு எதிராக தபால் அட்டைகளை அவரது முகவரிக்கு அனுப்பி வருவதுதான்,  மேற்குவங்கத்தில் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bangla_train_crash11

  வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்