SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவை தேர்தலுக்கான 7-ம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளிலும் நிறைவு: 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

2019-05-19@ 18:14:42

பீகார்: நாடு முழுவதும் கடந்த 2 மாதமாக நடந்து வந்த மக்களவை தேர்தல் முடிவடைந்தது. நாட்டின் 17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 12-ம் தேதியுடன் 6  கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம், பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு  வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளுக்கு, 7-வது மற்றும் இறுதி கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும்  காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த 4 தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர்  கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேர் என மொத்தம் 137 பேர்  போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற 7-வது மற்றும் இறுதி கட்டத் தேர்தல் களத்தில் பிரதமர் மோடி உள்பட 918 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில், உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் 13 தொகுதிகளில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ்  சார்பில் அஜய் ராயும், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் ஷாலினி யாதவும் போட்டியிடுகிறார்கள். மத்திய அமைச்சர்  மனோஜ் சின்ஹா, பாஜ மாநிலத் தலைவர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் மீண்டும் களத்தில் உள்ளனர்.  பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அவருடைய மனைவியும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல், மற்றொரு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, நடிகர் சன்னி  தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள். யூனியன் பிரதேசமான சண்டீகரில், பாஜ சிட்டிங் எம்பி கிரண் கெருக்கும், முன்னாள்  ரயில்வே அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பவன் குமார் பன்சாலுக்கும் இடையே போட்டி  நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜ என நான்குமுனைப் போட்டி நிலவி வருகிறது. மத்திய அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத், ராம் கிருபால் யாதவ், ஆர்.கே.சிங், அஸ்வனி குமார் சவுபே  ஆகியோர் போட்டியிடுகின்றனர். ரவிசங்கர் பிரசாத் போட்டியிடும் பாட்னா சாகிப் தொகுதியில், அவரை எதிர்த்து பாஜவில் இருந்து விலகிய நடிகர் சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே, மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தனர். லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,  மத்திய சட்ட  அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவி சங்கர் பிரசாத், பிகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உள்ளிட்ட தலைவர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். மேற்கு வங்கத்தில் மாநில  பாஜக துணைத் தலைவர் சந்திர குமார் போஸ், கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் பானர்ஜி, இந்திய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங், பஞ்சாபின் ஜலந்தர் நகருக்கு அருகில் உள்ள கார்கில் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு காலையிலேயே வந்த ஹர்பஜன் சிங், வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.  இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 2 மாதமாக நடந்து வந்த மக்களவை தேர்தல் முடிவடைந்தது. தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினமே பாஜக தலைமையில் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக  வருவாரா? இல்லை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுமா? என தெரியவரும்.

இறுதிக்கட்ட தேர்தல் 6 மணி நிலவரம்:

7-ம் கட்ட மக்களவை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி, உத்தரப்பிரதேசம் 54.37% வாக்குகளும், இமாச்சல்பிரதேசம் 66.18% வாக்குகளும்,  ஜார்கண்ட் 70.5% வாக்குகளும், சத்திஸ்கர் 63.57% வாக்குகளும், பஞ்சாப் 58.81% வாக்குகளும், மேற்குவங்கம் 73.05 % வாக்குகளும் , பீகார் 49.92% வாக்குகளும், மத்திய பிரதேசம் 69.38% வாக்குகளும் பதிவாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்