SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொலிவு இழக்கும் நெல்லை... மாநகராட்சி பாராமுகத்தால் ‘பாராக’ மாறிய நயினார்குளம்

2019-05-19@ 15:04:59

நெல்லை: நெல்லை மாநகர எல்லைக்குள் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் என்றால் நெல்லையில் உள்ள திரையரங்குகள்தான். இதுபோக மாவட்ட அறிவியல் மையமாகும். எனவே நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 244 ஏக்கர் பரந்து விரிந்து காணப்படும் நயினார் குளத்தை சுற்றுலா தலமாக மாற்ற 2011ம் ஆண்டு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த நயினார்குளம் மூலம் 600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இக்குளத்திற்கு தாமிரபரணி நதியில் இருந்து நெல்லை கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது கால்வாய் முழுவதும் கட்டிட இடிபாடுகளாலும், குப்பை கழிவுகளின் ஆக்கிரமிப்பாலும் அழிவின் விளிம்பில் உள்ளது. மிகவிரைவில் இருந்த சுவடே தெரியாமல் அழிந்து விடும் நிலையில் கால்வாயின் நிலை பரிதாபமாக உள்ளது. முறையாக பராமரித்து தூர்வாராததால் நயினார்குளமும் மண்மேடாகி தண்ணீர் கொள்ளளவுக்கே வழியின்றி போய்விட்டது. மேற்கு பகுதியில் வீடுகள் ஆக்கிரமிப்புகளாலும் குளத்தின் பரப்பு சுருங்கி வருகிறது. சிறுமழைக்கும் குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதுதவிர சாக்கடை, மலக்கழிவுகள் உள்ளிட்ட புறக்காரணிகளால் குளம் சிதைந்து மாசுபட்டுள்ளது. காலப்போக்கில் தண்ணீர் விவசாயத்திற்கே பயன்படுத்த முடியாத அளவிற்கு தண்ணீரின் தன்மையை மாறிவிடும் என்றநிலை காணப்படுகிறது.

இந்நிலையில் மாநகர மக்களின் பொழுதுபோக்குக்காக இக்குளத்தை தேர்வு செய்து 2001ம் ஆண்டு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மிதக்கும் ஓட்டல், படகு குழாம், குளத்தை சுற்றிலும் சோடியம் மின்விளக்குகளுடன் நடை பாதைகள், அமர்ந்து பேச இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் திறப்பு விழாவே காணாமல் இத்திட்டம் முடங்கி விட்டது. மிதக்கும் ஓட்டல் திட்டத்திற்கான பார்வையாளர் மாடத்துடன் திட்டம் முடங்கிப் போனது. இதை முறையாக கண்காணித்து பராமரிக்காத காரணத்தால் நடைபாதை, தடுப்புக்கம்பிகள், மின்விளக்குகள், இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. தடுப்பு கம்பிகள் காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் மாட்டு வண்டிகளின் மாடுகளை கட்டிவைக்க பயன்படுத்தப்பட்டது.

இதுபோல் குளத்தில் நடுவில் கட்டப்பட்ட பார்வையாளர் மாடம் இரவு நேரத்தில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இங்கு மது அருந்துவதும், விரும்பத்தகாத செயல்கள் நடக்கும் பகுதியாக மாறிவிட்டது. சாலையில் இருந்து குளத்தின் நடுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்துக்கு செல்லும் பாலம் சேதப்படுத்தப்பட்டு கம்பிகள் பெயர்த்து உடைத்து எறியப்பட்டுள்ளது. மேலும் மது குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து குளத்திலும் வீசி எறிகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்களின் வரிப்பணம் ரூ.60 லட்சம் மண்ணோடு மண்ணாகி மக்கிப் போயுள்ளது. நயினார்குளம் சுற்றுலா திட்டம் குறித்து பல முறை மாநகராட்சியின் வரவு - செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் திட்டம் 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் திட்டத்தில் பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் டவுன் நயினார்குளம் சுற்றுலா திட்டத்தையும் சேர்க்க வேண்டும். நயினார்குளத்தை சீரமைத்து படகு குழாம், குளத்தை சுற்றிலும் சோடியம் மின்விளக்குகளுடன் நடைபாதைகள், அமர்ந்து பேச இருக்கைகள் என அழகுபடுத்த வேண்டும், என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்