SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-05-18@ 00:05:25

‘‘2 மாசமா நடந்த தேர்தல் பரபரப்பு கடைசியா ஓய்ந்து போயிருச்சே..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி உள்பட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் ரொம்ப பரபரப்பா இருந்தது. இதில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அமமுக போட்டி போட்டு வாக்காளர்களை கவனித்து வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் ரூ.5000 வரை வாக்காளர்களை கவனிக்கலாம். அதன் மூலம் எளிதில் வெற்றி பெறலாம் என கணக்கு போட்டு முதல்வருக்கு தகவல் அளித்தனர். இதை கேட்டு அதிர்ந்தவர் ரூ.2 ஆயிரம் போதும் என கூறியதாக சோகத்துடன் தெரிவித்தனர். இவர்களுக்கு போட்டியாக வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ெகாடுத்து வருதாம் அமமுக..’’ என்றார் விக்கியானந்தா.   ‘‘உள்ளாட்சி தேர்தல் பூத் ஆய்வுக்கூட்டத்துல பஞ்சாயத்து நடந்துச்சாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தல் பூத் அமைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் சமீபத்துல நடந்துச்சு... இதுல வார்டு சீரமைப்புல அதிகப்படியான குளறுபடிகள் இருந்ததைக் கண்டு கட்சியினர் மிரண்டு விட்டனராம்... மீண்டும் வார்டு சீரமைப்பை செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து அதிமுகவினரும் மனுக்கள் வழங்கினராம்... விசாரிச்சு பார்த்தா தங்களுக்கு சாதகமான ஓட்டுகளை குறிவைத்து, வார்டு சீரமைப்பில் குளறுபடிகளை அதிமுகவினரே ஏற்படுத்தியது தெரிஞ்சதாம்... அதாவது தற்போதைய பேரூராட்சி அதிகாரி ஒருவர், முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஒருவருடன் சேர்ந்து இந்த குழப்பதை ஏற்படுத்தினதா பரபரப்பாக ஓடிக்கிட்டிருக்கு... அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக மீதான பெயரை காப்பாற்றும் நோக்கில், திடீரென பேரூராட்சி அதிகாரி தனக்கும், வார்டு சீரமைப்பு பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பார்ப்போரிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம்.... ஆனால் அவர் கூறுவதை யாரும் நம்ப மாட்டேங்கறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உயர்கல்வித்துறையில கடைசி கட்ட வசூலுக்கு தயாராகிட்டு வராங்களாமே.... ’’‘‘ஆமா... மாநிலம் முழுசும் கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல 300 பேருக்கு மேல போலி சர்டிபிகேட் கொடுத்து சேர்ந்தவங்க இருக்காங்க. அப்பப்போ இவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பறதும், அப்புறம் அதிகாரிங்கள கவனிச்சா, அப்படியே கிடப்புல போடுறதும் தான் வழக்கமா இருக்குது. இந்த விவகாரத்துல 2016ம் வருசத்துல இருந்து, போன ஜூலை மாசம் வரைக்கும் 11 பேர் சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க. ஆனா இதெல்லாம் ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்த மாதிரி, வேணும்னே இப்போ உயர்கல்வித்துறை ஆபீசருங்க பரப்பி விட்டுருக்காங்க. திடீர்னு ஏன் இந்த பரபரப்புனு கேட்டா, கடைசி நேர வசூல் முயற்சி தான் காரணம்னு, காலேஜ் வட்டாரத்துல ரிப்ளை வருது. அதாவது, டைரக்டரா இருக்குற லேடி ஆபீசர், ஓய்வுபெற்று இந்த மாசத்தோட வீட்டுக்கு போறாங்க. எனக்கு அடுத்த 6 மாசத்துக்கும் பணிநீட்டிப்பு கொடுங்கனு, மினிஸ்டர் மூலமா காய் நகர்த்துனாங்க. ஆனா, மேடம் மேல இருக்குற புகாரால, உயர்கல்வித்துறை செக்ெரட்டரி மறுத்துட்டாரு. அதனால தான், வேறுவழியில்லாம நோட்டீஸ் விநியோகம்னு பரபரப்ப உண்டாக்கி, போலி சர்டிபிகேட் பேராசிரியருங்க கிட்ட கடைசியா ஒரு ‘கவனிப்ப' பார்த்துட்டு போயிரணும்னு, முடிவோட இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூத்துக்குடி பரபரப்பாகியிருக்காமே..’’

‘‘மீன்பிடித் தொழில், தொழிற்சாலைகள் என பரபரப்பாக இயங்கி வந்த தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 23ம் தேதி துப்பாக்கி குண்டுகள் மனித உயிர்களை துளைத்தெடுத்தன. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி பேரணி நடத்திய மக்கள் வன்முறை வெடித்ததால் சாலைகளில் சுருண்டு விழுந்தனர். அதன் பிறகே ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு நடந்த ஓராண்டை நெருங்கும் வேளையில் தூத்துக்குடி மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்ட நினைவு தினம் வருகிற மே 22ம் தேதி வருகிறது. மறுநாள் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை. இதனால் உச்சகட்ட பதற்றத்தில் உள்ளது தூத்துக்குடி. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 13 பேரை சுட்டுக் கொலை செய்தவர்களுக்கு ஓராண்டு நினைவு தினத்திற்கு மறுநாள் தீர்ப்பு கிடைக்கும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் இப்போதே கூறத் தொடங்கியுள்ளனர். இதனால் ஸ்ெடர்லைட் நினைவு நாளும், அதற்கடுத்த நாள் ஓட்டு எண்ணிக்கையும் தூத்துக்குடியை பரபரப்பாக்கி இருக்கிறது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

 • airportchina2019

  சீனாவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட விமான நிலையம்: 97 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு பெரிது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்