SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய அரசு அமைப்பதற்கு நிச்சயமாக நீண்ட நாள் தேவைப்படாது : ராகுல் காந்தி

2019-05-16@ 17:35:34

புதுடெல்லி : இந்தியாவில் மக்கள்தான் எஜமானர்கள், அவர்களது முடிவுக்காக நான் காத்திருக்கிறேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் வேலை இல்லா பிரச்சனை, பொருளாதார சிக்கல்கள் அதிகம் உள்ளது என்றும், மக்களின் முடிவு தெரிந்த பிறகே எனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மே 23ம் தேதி மக்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய ஆட்சி பற்றிய தெளிவான நிலை தெரிந்து விடும், புதிய ஆட்சி உடனடியாக அமைந்து விடும் என்று கூறியுள்ளார். புதிய அரசு அமைப்பதற்கு நிச்சயமாக நீண்ட நாள் தேவைப்படாது என கூறிய அவர், எனது இலக்கு எல்லாம் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.

புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து இந்தியாவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது. பிரதமர் மோடி 5.55 லட்சம் கோடி ரூபாயை 15 பணக்காரர்களுக்கு கொடுத்து விட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் காவலாளியே திருடனாக மாறியது அனைவருக்கும் தெரியும் என்றும், அந்த பணத்தை வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் கொடுக்கும் திட்டமானது வெளிப்படையானது, அதில் ஊழல் நடக்க வாய்ப்பில்லை. இந்த திட்டத்தின் கீழ் வேலை இல்லாதவர்களுக்கு பணம் நேரிடையாக கையில் கிடைக்கும் என அவர் உறுதியளித்துள்ளார். பிரதமர் மோடி மிகவும் ஆணவமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்டுள்ளார், யாருடைய கருத்தையும் கேட்பதில்லை. எனவே மோடியை தோற்கடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ரபேல் போர் விமானம் ஒப்பந்த திட்டத்தால் பல இடைத்தரகர்கள் பயனடைந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசினால் மோடி கோபப்படுகிறார், கோபம் மோடியின் கண்களை மறைத்துள்ளது என அவர் விமர்சித்துள்ளார். மோடி வெற்றிபெற்றதும் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார் ஆகியோரிடமும் பேசி இருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் அவரை தோற்கடிப்பது கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் அவர் நிறைய தவறுகள் செய்துள்ளார் என ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மோடி என்னையும், எனது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஆனால் நான் பதிலுக்கு அதே போன்று விமர்சனம் செய்து பேசவில்லை. பிரதமர் என்ற முறையில் மோடியை நான் மதிக்கிறேன். அன்புதான் வெற்றி பெறும், வெறுப்பு அரசியலுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது என கூறிய ராகுல் காந்தி, தேர்தல் முடிந்த பிறகும் கூட அன்பு மட்டுமே தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • russiabicycle

  ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

 • canadaplastic

  கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

 • paradechina

  சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

 • buddhapurnima

  புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

 • flyingtaxi

  ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்