SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அரசாணை வெளியீடு!

2019-05-16@ 15:56:15

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் 2வது அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுற்ற நிலையில், நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த வாரம் மாநில தேர்தல் ஆணையம் அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மேலும் ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்கு சாவடி மையங்கள் பயன்படுத்தப்படும் என்றும், அதில் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1,200 வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் ஒரு வாக்குச் சாவடி மையமும், 1,200 முதல் 2,400 வரை வாக்காளர்கள் உள்ள பகுதியில் இரண்டு வாக்குப்பதிவு மையமும் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் இடங்களில் புதிதாக வாக்குச் சாவடி மையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் மாநகராட்சிகளில் 1,400 வாக்களர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1,400 முதல் 2,800 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2,800க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் வாக்குச்சாவடி மையங்கள் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்