SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

2019-05-16@ 15:33:29

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,தேனி , திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்